கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/07 அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள். வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது. மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.
நிரந்தரச்சுட்டி

2003/07 என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..? ஓம் நான் போடுறேல்லை. என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..! அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/07 இதுவரை என் மௌனத்தையே பலருக்குப் பதிலாக்கியுள்ளேன். இப்போதெல்லாம் உன் மௌனமே எனக்குள் கேள்வியாகின்றது. சந்திரவதனா 18.1.2003 ************************************************************************ #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/07 "என்ரை தலேணியை ஆர் எடுத்தது? அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது." தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன். தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/08 நீயே..! அதிசயமாய் அழகிய ஓவியமாய் நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய் தழுவுகின்ற காற்றலையாய்..... எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..? உன்னை எண்ணி...! பூக்களின் நறுமணங்களை எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..! உனது விழிமொழிதலால் எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..! உனது குடிபுகுதலினால் எத்தனை மனமுகடுகளில் இனிய கானங்கள் ஒலித்தனவோ..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/08 மனசு சூனிய வெளிக்குள் சிக்கித் தவிக்கிறது. உன்னவள் உன் அஸ்தியை ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள். அவள் புண்ணியவாட்டி. உன் அருகிருந்து தன் கடன் முடித்து விட்டாள். நான் எதுவுமே செய்யாதிருந்து விட்டு இப்போ.......... சூனிய வெளிக்குள் நின்று சுற்றிச் சுழல்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/08 போரிலும் புலம் பெயர் வாழ்விலும் வாழ்வின் வசந்தங்கள் வாடி விட்ட தனிமை பூத்த ஒரு பொழுதில் தானே உன் தொலைபேசி அழைப்பு எனைத் தேடி வந்தது. நட்பென்றுதானே நம்பினேன் கை கோர்க்க எண்ணி விரல் நீட்டினேன் என் விரலை சிறை வைத்து பின் முறித்தெறிவதற்கான முன்னேற்பாடுதான் அது என்று முற் கூட்டியே நீ சொல்ல மறந்ததேன்......
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/08 பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/08 ஈமெயில் பார்த்து இதயச் சுவர்கள் வேர்த்து முகம் தெரியா உனக்காய் முழுமதியாய் சிரித்து.........! இதற்கு என்ன பெயர்.......!!! இதுவும் காதலா.......??? சந்திரவதனா - 1999 ************************************************ #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/08 அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி......... தடுமாறியிருக்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 சிறகிருக்கிறது என்னைப் பறக்க விடு என்பது பிள்ளை மனம். சிறு பிள்ளை நீ என் இறகுக்குள் ஒளிந்து கொள் என்பது பெற்ற மனம். புரியாமல் பறந்தோடும் பிள்ளை மனம் புரியும் போது அதுவும் பெற்ற மனம். சந்திரவதனா - யேர்மனி - 11.6.1999 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 இந்த சுபா யாராக இருக்கும் என்று நான் பல தடவைகள் ஆராய்ச்சி செய்து விட்டேன். பலரையும் கேட்டுப் பார்த்து விட்டேன். பலன் என்னவோ பூச்சியம்தான். சுபாவைத் தெரிந்த யாரையுமே நான் இன்னும் சந்திக்கவில்லை. சுபா ஆணா பெண்ணா என்ற ஆராய்ச்சியில் கூட நான் தோற்றுத்தான் போனேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 சுபாவைக் கண்டு பிடித்தேனோ இல்லையோ, சுபாவைத் தேடும் போது சில அன்பு உள்ளங்களின் அக்கறையான செயற்பாட்டைக் கண்டு கொள்ள முடிந்தது. அவர்கள் தாமாகவே தமக்குத் தெரிந்த சுபா பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வைத்து என்னை சந்தோசிக்க வைத்தார்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 காற்றே! உனக்கும் இரண்டு முகமா........
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள். பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 வேலை நேரம் ஏதோ அலுவலாக வெளியில் வந்த போது அவன் பணம் எடுக்க என்று வந்திருந்தான். கார்ட்டைப் போட்டு இரகசிய இலக்கங்களை அழுத்தி விட்டுத் திரும்பிக் குழந்தைத் தனமாய் சிரித்தான். சந்தோசமாக இருந்தது. தமிழன். சில நாட்களுக்கு முன் அவனை பேருந்தினுள் சந்தித்த ஞாபகம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 பொட்டு வைப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும்? அதனால் என்ன பயன்? என்பவை பற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அம்மா வைத்துப் பழக்கிய பொட்டை நானும் தொடர்ந்து வைத்து வந்தேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/09 திரைப் படப் பாடல்களில் பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..? கருத்தாழம் மிக்கவை...? என்ற சர்ச்சை யின் போது............. அனேகமானவர்கள் பழைய பாடல்களே சிறந்தது. கருத்தாழம் மிக்கது. இலக்கியம் நிறைந்தது. என்று கூறும் போது எனக்கு சற்று எரிச்சலே வருகிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/10 மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி........ இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம் அருமையான பாடற் காட்சி. கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/10 எழுத நினைத்து எழுதாமல் போனவைதான் பல. என்றைக்கோ நடந்தவைகள் நினைவுகளில் மீட்டப் பட்டு மீண்டும் பதிவாவது போல இன்று எழுதாமல் விடுபட்டவை என்றைக்காவது ஒருநாள் பதிவாகும். இன்னும் சில மணிநேரங்களில் லண்டன் நோக்கிப் பயணிக்கப் போகிறேன். மீண்டும் இங்கு வரும் போது லண்டன் பற்றிய ஏதாவது புதிய செய்திகள் இருந்தால் கொண்டு வருகிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/10 Frankfurt Hahn - Germany இணையத்தளஙகளில் தேடியதில லண்டனுககுப் பறப்பதற்கான விமானச்சீட்டு Frankfurt Hahn Airport இலிருநது London Stansted Airport க்கு 9.99 Euroக்கும், லண்டனிலிருந்து திரும்புவதற்கான விமானச்சீடடு 1.99 Euroக்கும் கிடைத்ததால் இம்முறை Stuttgart Airport ஐத தவிர்க்க வேண்டியதாயிற்று.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/10 London, Buckingham Palace #
நிரந்தரச்சுட்டி

2003/10 Edmonton என்ற போர்வீரன் யேர்மனியருடனான போரிலே மடிந்து போன இடமாகிய Edmonton இலிருந்து கொண்டு நேற்று முன்தினம் Blue Water க்குப் போய் வந்தோம். போகும்போதும் வரும்போதும் தேம்ஸ்நதிக்கு மேலால் கட்டப் பட்டிருக்கும் பாலத்தைக் கடக்கும் போது 1£ கொடுக்க வேண்டும' The Big Ben, London, United Kingdom. Tower bridge, London, United Kingdom.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/10 எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது. Sinthu born on 20.10.2003 at 7.23PM in London. நானும் எனது கணவரும் எமது பேரக் குழந்தை சிந்துவுடன். புதிய வரவோடு நாம்.... #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/10 சில வாரங்களாக வலைப்பூக்களோடு முழுமையாகச் சங்கமிக்க முடியாதிருந்தது. ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது. மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 எனது மகன் திலீபனுக்கு வரும் எட்டாம் திகதி திருமணம். அதுதான் மீண்டும் நேரத்தோடு ஓட்டம். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 11-07-2003 - உதயன் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபாலசிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப்பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 பேரக்குழந்தையின் வரவு, மகனின் திருமணம் என நேரத்தோடு நாட்களும் அசுர வேகத்தில் பறக்கின்றன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 எதிர்பார்த்தது போலவே வெங்கட்ரமணியின் வலைப்பின்னல் பிரமாதமாகவே இருந்தது. Tamil Bloggers' Journal இல் மற்றைய வலைப்பூக்களில் சிந்தியிருக்கும் மற்றையவர்களின் எண்ணங்கள் மட்டும் என்றில்லாது வேறும் பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. சுலபமாகப் பலதை அறிய முடிகிறது. க்ருபா நன்றாகத்தான் பின்னியிருந்தார்.. ஏதோ..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 கண்ணன் கொரியாவில் சோறு வடிக்கிறார். வைகைக்கரைக் காற்றே.. யிலும் அம்மா வைத்த பருப்பு உருண்டைக் குழம்போடு.. சமையலறைப் பக்கமாய் நிற்கிறார். ஆடிக்குப் பின் மீண்டும் இப்போதான் பரணி இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார். அவரின் பூமனசு இனித் தொடரும் என்றுதான் நம்புகிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 என்ன நடந்ததெனத் தெரியவில்லை. Bamini யில் எழுதி சுரதாவின் கொன்வேட்டரில் Unicode க்கு மாற்றி இங்கு இணைத்தேன். எழுத்து மாறி விட்டது இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை. #
நிரந்தரச்சுட்டி

2003/11 ம�..... விடிந�த� விட�டதா..? நேற�ற� ம�ன� தினம� அஸ�ஸெம�பிலி மீற�றிங�. வீட� வந�த� சேர நேரமாகி விட�டத�. வழமையில� வர�டத�தில� ஒர� நாள�தான� இப�படி அட�டகாசமாக இர�க�க�ம�.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 (பருத்தித்துறைப் பிரதேசப்பொறுப்பாளர் கப்டன்மொறிஸின் நினைவாக) வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய் தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/11 பிறப்புக்கு அர்த்தம் சொன்ன தூய தாயகன் பிரபாகரன் தலைவர்கள் எல்லோருமே மக்கள் மனதில் நிலை கொள்வதில்லை இவன் நிலை கொண்டவன் அண்ணனாய் ஆசானாய் தம்பியாய் தந்தையாய் மைந்தனாய்....
நிரந்தரச்சுட்டி

2003/11 நான் எதிர் பார்க்கவில்லை. 16.11.2003 அன்று மனஓசை பகுதியில் நான் எழுதிய விடயமொன்று à®®à¯�..... விடிநà¯�தà¯� விடà¯�டதா..? நேறà¯�à®±à¯� à®®à¯�னà¯� தினமà¯� அஸà¯�ஸெமà¯�பிலி மீறà¯�றிஙà¯�. வீடà¯� வநà¯�தà¯� சேர நேரமாகி விடà¯�டதà¯�.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/12 Sinthu 16.11.2003 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2003/12 இனிய நத்தார் வாழ்த்துக்கள் #
நிரந்தரச்சுட்டி

1