கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 எதை எழுதுவது? எப்படி எழுதுவது? புதுவருடம் இத்தனை சோகத்தைச் சுமந்து வரப்போகிறதென யாராவது நினைத்தோமா..? போரின் வடுக்கள் ஆறுமுன்னே எங்கள் சந்தோசங்களைக் கடல் கொண்டு போகுமென துளியாவது உணர்ந்தோமா? அலை வந்து தழுவும்... தாலாட்டும்.. என்றுதான் எண்ணியிருந்தோம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 Pls visit http://www.tsunami-trocsc.com/home/ #
நிரந்தரச்சுட்டி

2005/01 இன்று ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பத்திரிகையில் இருந்து வந்தது. இந்தச் செய்தியை அவர்களது பத்திரிகையில் பார்த்து விட்டு ஒரு தமிழன் தொலைபேசியில் அழைத்து "நீங்கள் எப்படி இந்தச் செய்தியை உங்கள் பத்திரிகையில் போடலாம். TROவும் Tigerம் ஒன்றுதானே.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 உறைவிடத்தையும் உடைமைகளையும் மட்டுமல்ல கடல் கொண்டு போன உறவுகளையும் தேடுகிறான் இவன் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 அலை கொண்டு போனவர்களை அல்பத்தில் தேடுகிறான் இவன் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 அச்சில் பதித்து விட்டு புத்தகங்களை விற்கவும் முடியாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லாமல் கட்டியழுபவர்கள் ஒரு புறமிருக்க சந்தா கட்டியிருந்தும், புத்தகங்கங்களும், பத்திரிகைகளும் இடைநடுவில் வராது நின்று விடுவது இன்னொருபுறம் நடக்கிறது. இது விடயத்தில் இராதாகிருஷ்ணன் கொஞ்சம் மனம் நொந்திருக்கிறார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 புகைப்படங்கள் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/01 எனது பதிவொன்று பதிந்த உடனேயே காணாமற் போய்விட்டது. ஏன்..? தொடரும் இப்பிரச்சனைக்கான நிவர்த்தியை யாராவது கண்டு பிடித்தீர்களா? #
நிரந்தரச்சுட்டி

2005/01 நா.கண்ணன் இட்லி செய்யும் முறையைத் தந்துள்ளார். எனக்குத் தெரிந்த இன்னுமொருமுறை. உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 சனி நீராடு என்று சொல்லி ஊரில் சனிக்கிழமைகளில் நீராடுவதும் அதற்கு முன் எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்விப்பதுவும் ஆண்களுக்குரிய விடயங்களாகவே இருந்தன. மசாஜ் செய்விப்பதற்கென்று ஆண்கள்தான் உரிய இடத்துக்குப் போய்வருவதை நான் கண்டிருக்கிறேன். வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.
நிரந்தரச்சுட்டி

2005/02 மனஓசை இன்று முழுக்க மௌனமாகவே இருந்து விட்டது. ஒரு முக்கிய வேலை இருந்ததால், சில தடவைகள் முயன்றும், மனதை ஒரு நிலைப்படுத்தி இங்கு எதுவும் எழுத முடியாது போய் விட்டது. அது மட்டுமா இந்த டயானாவின் பதிவு மீண்டும் மீண்டுமாய் என்னுடன் சவால் விட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 அண்ணி தொலைபேசியில் அழைத்து "பரதன் இயக்கத்துக்குப் போய் விட்டான்" என்ற போது சுயநலமாக மனசு அழுதது. அவன் எனது அண்ணனின் மூன்றாவது மகன். "பன்னிரண்டே வயசுதானே! ஏன் போனான்? நன்றாகப் படிப்பானே! அண்ணி அனுப்பி வைக்கும் படங்களிலிலெல்லாம் துருதுருவென்ற விழிகளுடன் என்னைப் பார்ப்பானே! எனக்கு அழுகையாக வந்தது. இப்ப என்ன அவசரம் வந்து போனான்..
நிரந்தரச்சுட்டி

2005/02 சமையல் என்பது ஒரு கலை என்ற எண்ணத்திலிருந்து வழுவி அது பெண்களின் தலையில் திணிக்கப் பட்டு சமையலும் அட்டில்கூடமும் பெண்களுக்குச் சொந்தமான விடயங்கள் போன்ற பிரமை ஏற்படுத்தப் பட்டு பலபெண்கள் தமது திறமைகளை காலங்காலமாய் அட்டில்கூடத்துக்குள்ளேயே முடக்கி விட்டார்கள்.
நிரந்தரச்சுட்டி

2005/02 (diana)தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா? இளவரசி டயானா இளவரசியாக மட்டும் இராது ஒரு சமூகசேவகியாகவும் இருந்தார். அவரை சாதனைப்பெண்கள் பட்டியலில் ... நான் சேர்த்தேன். அது தவறு என எல்லாளன் தனது கருத்தைப் பதித்துள்ளார்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இளவரசி டயானா இளவரசியாக மட்டும் இராது ஒரு சமூகசேவகியாகவும் இருந்தார். அவரை சாதனைப்பெண்கள் பட்டியலில் ... நான் சேர்த்தேன். அது தவறு என எல்லாளன் தனது கருத்தைப் பதித்துள்ளார். எல்லாளனின் கருத்து டயனா குறித்து எனக்குத் தவறான அபிப்பிராயம் எதுவும் கிடையாது.
நிரந்தரச்சுட்டி

2005/02 ஐ.பி.சி தமிழின் - சமுத்திரா - நிகழ்ச்சியினூடாக நடாத்தப்பட்ட நாடகப்பிரதிகள் போட்டி-2004 பற்றிய முடிவுகள் 1ம் பரிசாக தங்கப்பதக்கம் பரிசு பெறும் நாடகப்பிரதி- "அம்மாவே எல்லாமாய்" பிரதியை யார்த்தவர்:- திலகன், ஜேர்மனி.
நிரந்தரச்சுட்டி

2005/02 1ம் பரிசாக தங்கப்பதக்கம் பரிசு பெறும் நாடகப்பிரதி- "அம்மாவே எல்லாமாய்" பிரதியை யார்த்தவர்:- திலகன், ஜேர்மனி.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 "உன்னைக் கொடு என்னைத் தருவேன்" காதலிக்கையில் "உன்னைக் கட்ட என்ன தருவாய்" கல்யாணத்தில் "உன்னைக் கட்டி என்ன கண்டேன்" தொடரும் வாழ்வில் #
நிரந்தரச்சுட்டி

2005/02 காதலர்தினத்துக்காக காதல் கொண்ட மனங்கள் பூக்களுடனும் கவிதைகளுடனும் காத்திருந்த வேளையில் இங்கு யேர்மனியில் ஒரு சந்தோசமான சம்பவம் நிகழ்ந்தது. காதலர்தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 2000இல் நடந்த அந்த சம்பவம் எனது நினைவில் வந்துள்ளது. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

2005/02 எங்கள் வீட்டுக்குள் ஒரு சின்ன அதிசயம் நடந்தது. உங்களுக்கு எப்படியோ...? எனக்கு இது அதிசயம் போலத்தான். அதாவது எனது அண்ணன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அண்ணி பிறந்தநாள் டிசம்பர் 10ந் திகதி. 7வருடங்கள் கழித்து தம்பியின் திருமணம். அம்மா அப்பா பெண் பார்த்து (பேச்சுத் திருமணம்) திருமணம் நடந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 முன்னரெல்லாம் அடிக்கடி வலைவலம் வந்து ஒரு சில பதிவுகளைப் பற்றியாவது எழுதுவேன். இப்போதெல்லாம் அதற்கு அவசியமே இல்லாது காசி எல்லா வேலைகளையும் தமிழ்மணத்திலேயே செய்து வைத்திருக்கிறார்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இது 2002 இல் எழுதப்பட்டு 17.2.2002 இல் IBC தமிழில் ஒலிபரப்பானது "செட்டை கழற்றிய நாங்கள்" எனது பார்வையில் 95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.
நிரந்தரச்சுட்டி

2005/02 அந்த வீட்டுக்கு விருந்தினர் வந்திருந்தனர். உரையாடிக் கொண்டிருந்த தந்தையின் காதுக்குள் மகன் எதையோ கிசுகிசுத்தான். தந்தை: காதுக்குக் கிட்ட வந்து முணுமுணுக்காதேடா கெட்ட பழக்கம.; என்ன விசயம் எண்டு உரக்கச் சொல்லு. மகன்:(சத்தமாக) கோப்பி குடியுங்கோ எண்டு அவரைக் கேட்க வேண்டாமாம். வீட்டிலை பால் இல்லையாம்..... அம்மா சொல்லச் சொன்னவ.
நிரந்தரச்சுட்டி

2005/02 சில வாரங்களுக்கு முன்பு, சுனாமி அனர்த்தங்களின் பின்பு, என் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. போய்ப் பார்த்த போது நான்கு யேர்மனியச் சிறுவர்கள் உண்டியலுடன் நின்றார்கள். "சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப் பட்ட சிறீலங்கா மக்களுக்கு காசு சேர்க்கிறோம்." என்றார்கள்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இது எனது கவிதை அல்ல. 1998 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்ததால் இதை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். படித்துப் பாருங்கள் சிலசமயம் உங்களுக்கும் பிடிக்கலாம். அவர் இவர் என்று ஆட்களைப் பற்றி உதட்டைத் திறந்து உட்கார வராதீர்கள் என்னிடம்......
நிரந்தரச்சுட்டி

2005/02 கடந்த வருடம் யேர்மனியிலிருந்து வெளியாகும் பூவரசு இனியதமிழ்ஏடு நடாத்தும் போட்டி பற்றி அறிவித்திருந்தேன். புதியவர்கள் பலரும் உலகளாவிய ரீதியில் இப்போட்டியில் கலந்து கொண்டதை அறிய முடிந்தது. சந்தோசமான விடயம்தான். 6.2.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 ஏன் எழுதுகிறோம்..? ஏன் எழுதுகிறார்கள்..? என்ற கேள்விகளுக்கான பதில்கள் எத்தனையோ விதமாக வருகின்றன. சில பதில்கள் குதர்க்கமாகக் கூட வருகின்றன. எனது கணவரின் நண்பர் ஒருவர் சொன்னார். "ஏதோ ஒரு தேவை கருதித்தான் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். தம்மை வெளிக்காட்டிக் கொள்ளவோ அல்லது தமக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெறவோதான் எழுதுகிறார்கள்.
நிரந்தரச்சுட்டி

2005/02 ஆணடுகள் சில கழித்து தாயகம் சென்ற போது கொழும்பு றோட்டில் கொஞ்சத் தூரந்தான் போயிருப்பேன் "வீட்டை போன உடனை பொலிஸ்ரிப்போர்ட் எடுக்கப் போகோணும்.
நிரந்தரச்சுட்டி

2005/02 தமிழ்வலைப்பதிவுகளின் வளர்ச்சி ஒரு பெரு விருட்சமாகியுள்ளது. சில சமயங்களில் ஒரு சமுத்திரமோ என்று கூட எண்ணும் படி இவ்வளர்ச்சி எம்மைப் பிரமிக்க வைக்கிறது. அறிவியல், தொழில்நுடப்பம், விஞ்ஞானம், இலக்கியம், சமையற்கலை, வரைகலை என்று எல்லாவற்றையும் தனக்குள்ளே நிரப்பி வைத்திருக்கின்றன வலைப்பதிவுகள்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இன்று நாம் நினைத்ததும் தாயகம் சென்று திரும்புகிறோம். அப்படிச் செல்ல முடியாத ஒரு நிலை அன்று இருந்தது. அந்தப் பொழுதில் நான் என் குழந்தைகளை யேர்மனியில் விட்டுவிட்டு போர்முகம் காட்டி நிற்கும் என் தாயகத்தை நோக்கிப் பயணித்த போது என்னுள் எழுந்த உணர்வுகளில் ஒரு துளி. 1997 மார்கழியில் தாயகம் சென்ற போது...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 மாரிக்கிணறு நிரம்பியிருந்தது. கிண்ணத்தால் எட்டி அள்ளிக் குளிக்கலாம் போலிருந்தது. குளிரை நினைத்தால்தான் பயமாக இருந்தது. பல்லைத் தீட்டி முகம் கழுவி தேநீர் ஒன்றைக் குடித்து விட்டுக் குளிக்கலாம் என நினைத்துக் கொண்டேன். இன்னும் சரியாக விடியவில்லை. அம்மா எனக்காக வேளைக்கே எழும்பி விட்டா. இருட்டில் ஆட்டில் பால் கறந்திருப்பா.
நிரந்தரச்சுட்டி

2005/02 வலைப்பதிவுகளின் வளர்ச்சி பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். இதில் காசியின் தமிழ்மணத்தினூடான முயற்சிகள் வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பெரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
நிரந்தரச்சுட்டி

2005/02 கவிதையின் வரைவிலக்கணம்தான் புரியவே மாட்டேனென்கிறது. எதுகை மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்களைக் கவிதைகளில் எதிர் பார்க்கிறேன். எனக்கு அதெல்லாமுமாய் எழுதத் தெரியாவிட்டாலும் யாராவது இதையெல்லாம் சேர்த்து எழுதினால் மிகவும் ரசிப்பேன். ஆனால் எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூட சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.
நிரந்தரச்சுட்டி

2005/02 "ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும் காதல் கசக்குதையா வரவர காதல் கசக்குதையா... என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும்.
நிரந்தரச்சுட்டி

2005/02 உதவி செய்யப் போய் உபத்திரவங்களை வாங்கிக் கொண்ட அனுபவம் குறிப்பாகப் புலம் பெயர்ந்த பலருக்கும் இருக்கும். புலம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் தாங்கள் அனுபவித்த தனிமைகளையும், பாஷைப் பிரச்சனைகளையும், உதவிகள் இல்லாத தன்மைகளையும் மனதில் கொண்டு...
நிரந்தரச்சுட்டி

2005/02 18 வருடங்களுக்கு முன், என் கணவருடன் இங்கு, யேர்மனிய அகதி முகாமொன்றில் இருந்த சில நண்பர்கள் எங்களிடம் வந்திருந்தார்கள். மதிய உணவின் பின் எல்லோரும் தமது உடல்நிறையைப் பார்த்தார்கள். ஒருவருக்கு தன் நிறையில் திருப்தி இல்லை. நிறைகாட்டியிலிருந்து கீழே இறங்கினார். ஒரு Bodybuilder போல மசில்ஸ் எல்லாம் தெரியும் படி Body எடுத்தார்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்... நீயும் பத்து மாதம் நானும் பத்து மாதம்...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 புனைபெயரில் எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர்களைச் சாடவும், எழுத்துக்களால் மற்றவர்களை வெட்டவும், கொத்தவுமே சிலர் புனைபெயர்களைப் பாவிக்கிறார்கள். சிலரோ புனைபெயரால் சமூகத்துக்குத் தேவையான பல விடயங்களைச் சொல்கிறார்கள். சிலர் தம்மீது தமக்கே நம்பிக்கையில்லாமல் புனைபெயரில் எழுதுகிறார்கள்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இன்றைய வலைவலத்தில் பிடித்த, மனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சில மதம் பிடிக்கும் முறை படித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள் என்னை வியக்க வைக்கும் வலைப்பதிவாளர்களில் இவர் முக்கியமானவர்.
நிரந்தரச்சுட்டி

2005/02 இன்று தீபத்தில் "காதலே நிம்மதி" படம் போட்டார்கள். படம் தொடங்கி 15 நிமிடங்களின் பின்தான் எதேச்சையாகத் தொலைக்காட்சியின் முன் போனேன். நாசரும் மனைவியும் கோயிலுக்குள் கும்பிட, கதாநாயகி நாசரின் குட்டி மகளுடன் ஒழிந்து விளையாட.. படத்தைப் பார்க்கும் எண்ணமும் வந்தது. படம் சொல்ல வந்த விடயம் பிடித்திருந்தது.
நிரந்தரச்சுட்டி

2005/02 "அம்மா காதல் படத்தை ஒருதரம் பாருங்கோ. நல்ல படம்" என மகன் திலீபன் சொன்ன போது காதல் இல்லாத படங்களா..? என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவன் சொன்னால் படம் நல்லாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் வந்தது. இருந்தும் உடனே பார்க்கும் எண்ணம் வரவில்லை.
நிரந்தரச்சுட்டி

2005/02 அன்பே உனக்கும் எனக்கும் என்ன சொந்தம் உன்னோடு எனக்கென்ன பந்தம் அலைஅலையாய் உன் நினைவு வந்து என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன் ஒரு பனி போலக் கரைந்து போகிறேன். தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம் வாழ்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

2005/02 என்னுடைய profileக்குப் பானால் Recent Posts 7.11.2004 உடனேயே நிற்கிறது. அதற்குப் பின்னர் எழுதிய எதுவுமே வருகுதில்லை. காரணம் யாருக்காவது தெரியுமா? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 வழமையாக பாலாதான் பல்லவியும் சரணமும் என்று தன் பதிவுக்கு எங்களை சந்தோசமாக அழைப்பார். இன்று ஒரு மாற்றத்திற்காக பாடல்களிலிருந்து எனக்குப் பிடித்த சில இடைவரிகளைத் தருகிறேன். பாடலைக் கண்டு பிடியுங்கள். முடிந்தால் படம் பாடியவர் போன்றவற்றையும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 யேர்மனியில் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் இடமோ மலைப்பகுதி. வீட்டுக்குள்ளிருந்து பனியைப் பார்க்கும் போது கொள்ளை அழகு. பனிப்பூத்த மரங்கள்... பனி போர்த்திய வீடுகள்... அவைகளை ரசிப்பதில்தான் எத்தனை சுகம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 காணாமற்போகும் பதிவுகள் தற்போது நேசகுமாருக்கு இப்பிரச்சனை வந்துள்ளது. எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. என்னைப் போல இன்னும் பலருக்கு இருந்தது. ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, ஒரு விடயத்தைக் கண்டு பிடித்தேன். தலைப்பு எப்போதும் சிறிதாக இருக்க வேண்டும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/02 ஐரோப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள், ஐரோப்பியாவில் தமது பிள்ளைகள் சிகரெட் புகைத்தாலோ அல்லது மது அருந்தினாலோ அல்லது காதலித்தாலோ.... ஐரோப்பியாவுக்கு வந்ததால்தான், தமது பிள்ளைகள் இப்படியான பழக்கங்களைப் பழகிக் கெட்டலைகிறார்கள். என்று சொல்லித் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 நாங்கள் மணலில் விளையாடினோம். இவர்கள் பனியில் விளையாடுகிறார்கள். Photos - Thumilan #
நிரந்தரச்சுட்டி

2005/03 முழுக்க முழுக்க பெண்களின் படைப்புக்களைக் கொண்டு இம்மாதத் திசைகள் இதழ் வெளிவந்துள்ளது. 27 பெண்கள் பங்களித்திருக்கிறார்கள். என் பங்காக அவள் நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 10.10.2001 இல் எழுதப்பட்டது எப்போதும் போலவே இன்றைய எனது காலையும் அவசரமாய்த்தான் விடிந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 குமரேஸ் பழைய பஞ்சாங்கம் பற்றி எழுதியுள்ளார். அதைப் பார்த்ததும் கடந்த வாரம் நடந்த ஒரு விடயம் நினைவில் வந்தது. எனது மகன் கடமையாற்றும் பத்திரிகையில் வாரபலன் வரும். கடந்த வாரம் அந்தப் பகுதிக்குரியவர் வரவில்லை என்பதால் தான்தான் அதை எழுதினேன் என எனது மகன் சொன்னான். "எப்படி எழுதினாய்?" என்று கேட்டேன்.
நிரந்தரச்சுட்டி

2005/03 தெரிதல் பற்றி ஈழநாதன் எழுதிய போது அதைப் பெற்றுக் கொள்ள எனக்கும் விருப்பம் என்று குறிப்பிட்டேன். பத்மனாபஐயருக்கு இது விடயமாக மின்னஞ்சல் செய்வதாகவும் சொன்னேன். ஆனால் நான் எழுத முன்னமே தெரிதல்கள் என்னை வந்தடைந்தன. இது பத்மனாபஐயரின் பாராட்டத்தக்க செயற்பாடுகளில் ஒன்று.
நிரந்தரச்சுட்டி

2005/03 உதவுங்கள்! எப்படித் தமிழில் எழுதுவது என்று ஒரு பெண் என்னிடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் அப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்களை எங்கிருந்து தரவிறக்கலாம், எப்படி சுரதாவின் செயலியில் விரும்பிய வடிவங்களுக்கு மாற்றலாம் என்பதையெல்லாம் தெரியப் படுத்தினேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 இன்று எந்தப் பதிவுக்கும் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இதுதான் வருகிறது. #
நிரந்தரச்சுட்டி

2005/03 சுமதியின் ராஜகுமாரனும் நானும் கதையை வாசித்த போது பின்னூட்டம் கொடுக்க மனம் உந்தியது. பதிவிற்கான post a commentஐ அழுத்தினேன். அது செயற்பட மறுத்தது. சரி வாசித்தேன் என்றதோடு விட்டுப் போகமுடியாமல் நான் முன்னர் எழுதிய சிறுகதை ஒன்று நினைவில் வந்தது. இது ஏற்கெனவே திண்ணையிலும் வந்ததுதான்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 ஒரு பரீட்சார்த்த முயற்சி #
நிரந்தரச்சுட்டி

2005/03 உதயா குழம்பியிருக்கிறார். இதில் குழம்புவதற்கு அவசியம் இல்லையென்றே நான் கருதுகிறேன். குழந்தைகளிடம் இதைச் செய் என்றோ, அல்லது இதைச் செய்யாதே என்றோ ஒரேயடியாகத் தடுத்து விடக் கூடாது. ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கும். ஒரு குழந்தை பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 நேற்றைய நாராயணனின் கெட்டவார்த்தைகளின் அரசியல் என்னைப் பல விடயங்களை அசை போட வைத்தது. எனக்குத் தெரிந்த வரையில் எனது சின்ன வயதில் என்னைச் சுற்றியுள்ள ஆண்களில் சிலர்தான் தூஷணம் பேசினார்கள். பெண்கள் பேசி நான் பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 இவ்வாரம் என்னை வந்தடைந்த பத்திரிகை வடலி. மார்ச் மாத ஓலை வந்துள்ளது. எப்போதும் போலவே நல்ல கட்டுரைகள் நிறைந்துள்ளன. இம்முறை ஒரு சிறுகதையும் இடம் பிடித்துள்ளது. வலைப்பூக்களில் எங்களுக்கு அறிமுகமான ஷண்முகியின் உணர்வுகள் நிஜங்களாக சிறுகதை இடம் பெற்றுள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு. அது போலத்தான் அவரவர்க்கு அவரவர் மொழி தேன் வந்து பாய்வது போல இருக்கும். சில வருடங்களுக்கு முன் - அப்போது நான் ஒரு சுப்பர்மார்க்கெட்டிலும் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தேன். - திடீரென தமிழ்க்குரல். எனக்குள் உண்மையிலேயே மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி கலந்த இன்பம். தலைக்குள் சந்தோசக் கிறுகிறுப்பு.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/03 வார இறுதியில் எனக்குக் கிடைத்த பத்திரிகை ஒரு பேப்பர்(19). இளவரசர் சார்ள்ஸ்க்கு மட்டக்களப்பு முருகன் கோவிலில் ஒரு சிறுமி பொட்டு வைக்கும் காட்சியுடன் முதற் பக்கம். உள்ளே வழமையான சமாச்சாரங்கள்தான். சின்னதான... பெரிதான.. என்று சினிமாவிலிருந்து அரசியல் வரை பல செய்திகள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 ஏப்ரல் முதலாந்திகதி அனுபவங்களில் ஒன்று #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 ஏப்ரல் மாதத் திசைகள் வெளி வந்து விட்டது. அதில் இடம் பெற்ற மார்ச் மாதத் திசைகள் பற்றிய எனது பார்வை. பலகாலமாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந்தாலும் இதுவரை காலமும் எழுத்துலகமே ஆண்களுக்கானது போன்ற ஒருவித பிரமை எம்மிடையே உலாவி வந்துள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. யேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 நித்திரை விழித்துப் பட்சணங்கள் பலசெய்து வெற்றிலை பாக்குடன் மங்கலச் சுடரேற்றி முற்றிய நற் பழங்கள் புது மலர்களுடன் முகம் சிரித்துப் பத்தரை மாற்றுத் தங்கமென அலங்கரித்து பக்தியுடன் பரவசமாய் வரவேற்கும் நாளன்றோ முன்னொருகால் நாம் கண்ட சித்திரைப் புத்தாண்டு.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார். அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார் "பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 கற்பகதரு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படித்தான் இப்போ ஒரு பேப்பரும். அது தன் உச்சப் பயன்பாடு வரை சென்றிருக்கிறது. பொரித்த மீனை வைக்கவும், மாவரிக்கவும் கூட அது உதவுகிறது. நீங்களும் தாராளமாகப் பயன் படுத்தலாம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 அழகி படத்தை அருமையான படம் என்று எல்லோரும் புகழ்ந்தீர்கள். ஒரு படம் அருமையாவதற்கு கரு மட்டும் காரணமல்ல என்றாலும், அதன் கருவை அனேகமான ஆண்கள் எல்லோருமே வரவேற்றீர்கள்.
நிரந்தரச்சுட்டி

2005/04 ஆட்டோகிராப் படத்தில் சேரனது வாழ்வில் குறுக்கிட்ட மூன்று பெண்கள் பற்றிச் சொன்னார். அதே போல ஒரு பெண் தன் வாழ்வில் குறுக்கிட்ட மூன்று ஆண்கள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கான உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன. "அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... " பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான். "...ம்ம்ம்...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 ஏப்ரல் மாத வடலி வழமை போலவே நிறைந்த கட்டுரைகளுடன் எனைத் தேடி வந்துள்ளது. சின்னச் சின்னதாக நிறையத் துணுக்குச் செய்திகளும் சிறிய கட்டுரைகளும் பெரிய கட்டுரைகளும் என்று அறிந்து கொள்வதற்கு தாராளமாகக் கிடைத்தன. ஆரப்பல்லி போல அணைந்து வாழ்ந்தேனோ இதைப் புறநானூற்றில் பலரும் படித்திருப்பீர்கள். ஆனாலும் செ.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 பாடசாலையில் படிக்கும் காலங்களில் எமக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் கொக்கான் வெட்டுதல் முக்கிய விளையாட்டாக இருந்தது. இதைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். மாங்கொட்டை போடுதல், சிப்பி, ஏரோப்பிளேன், இது தவிர கிளித்தட்டு, கெந்திப் பிடித்தல், றவுண்டெஸ் இவைகளும் எமது பாடசாலைகளில் முக்கிய இடத்தை வகித்திருந்தன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/04 தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 நினைவுகளும், நிகழ்வுகளும், பதிவுகளும் கப்டன் மொறிஸ் முறியாத பனை தம்பியல்லவோடா நீ சுமை தாளாத சோகங்கள்! அந்த மௌன நிமிடங்களில்...! காத்திருந்து காத்திருந்து... - 7.3.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 Cartoon - Muunaa Quelle - Kirukkal #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இண்டைக்கு எங்கடை நகரத்திலை சந்திரமுகி படம் ஓடீனம். நான் யேர்மனிக்கு வந்து 19 வருசமாச்சு. இதுவரையிலை ஒரு தமிழ்ப்படம் எங்கடை நகரத்திலை ஓடேல்லை. முந்தநாள்த்தான் ஒரு பெடியன் ரெலிபோன் அடிச்சு "அக்கா சந்திரமுகி படம் ஓடுறம், வாங்கோ அக்கா" என்றான்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 சின்ன வயதில் வானொலி.. பத்திரிகை.. இரண்டையும் தாண்டி எனக்குச் செய்திகளைக் கொண்டு வருவது எனது அண்ணன்தான். எங்காவது விறாந்தை நுனியிலோ, அல்லது யாராவது ஒருவரின் கட்டிலில் சுவரோடு சாய்ந்து அமர்ந்தோ, அல்லது பின் வளவுக்குள் பனங்கொட்டில் அமர்ந்தோ... நாங்கள் கதையளப்போம்.
நிரந்தரச்சுட்டி

2005/05 கடற்கரையில் அந்தக் கல்லறைகள் "தென்றல் வரும் தெரு". "விடியலின் முகவரி" ஆகிய இரு கவிதைநூல்களை வெளியிட்ட கவிஞர் த.சரீஷ் அவர்களின் மூன்றாவது கவிதைத்தொகுப்பான கடற்கரையில் அந்தக் கல்லறைகள் என்னும் நூல் வெளியீட்டு விழா காலம் - 15.05.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 இணையங்களின் வரவில் ஐரோப்பியாவில் பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் இலவசப்பத்திரிகைகளே பெரும்பாலும் வாழ்கின்றன. பாரிசிலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையும் இந்த விடயத்தில் பலமாக ஆட்டம் கண்டு இப்போது இலவசமாக வெளிவருகிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 ஒடியல் மாவை தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும். இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போலத் தண்ணீர் விட்டுக் குழைக்கவும்.
நிரந்தரச்சுட்டி

2005/05 நா.கண்ணன் அவர்கள் ஒடியல் மாவை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார். அவருக்காக ஒரு பதிவு. தேவையான பொருட்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 உலகளாவிய ரீதியில் தொடரும் பாலியல் வன்முறை, ஜேர்மனியிலும் அவ்வப்போது தன் கோரமுகத்தைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒரு பெண்குழந்தை இந்தக் கோரத்துக்குப் பலியாகியிருக்கிறது. 6வயதுகள் மட்டுமே நிரம்பிய Ayla, 23.5.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 திசைகள் மாலன் அவர்களின் நேர்காணல் ஒன்று Bhasaவில் வந்துள்ளது. ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். முடிந்தவர்கள் யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாயிருக்கும். Development of Indic Language Computing, through his association with INFITT and as Validator of MicroSoft Office-Tamil Mr. Maalan V Narayanan is a journalist and writer of repute.
நிரந்தரச்சுட்டி

2005/05 இந்தப் பேப்பரைப் பார்த்ததும் ஒருவர், "என்ன! நல்ல பேப்பராக் கிடக்கு. ஓசியோ? எனக்கும் ஒரு ஒருபேப்பர் அனுப்பச் சொல்லி அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ என்றார். `எனக்கே ஓசி. பிறகு இதிலை சிபாரிசு வேறையோ?` என்ற கேள்வியை நானே என்னைப் பார்த்துக் கேட்டு விட்டு, "இஞ்சை வரக்கை வாசியுங்கோவன்.
நிரந்தரச்சுட்டி

2005/05 ஒரு பேப்பர் 23ம் வந்து விட்டது. 22ம் பேப்பரைப் பார்த்து எழுத நினைத்தும் எழுதாமல் விட்டவைகளில் முக்கியமானது - ஒருபேப்பர், செல்வநாயகியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துள்ள செய்தி. எது ஆன்மீகம்? என்ற செல்வநாயகியின் தொடர் கட்டுரை மரத்தடி.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/05 Chancellor Gerhard Schroeder & CDU Cheffin Angela Merkel Wurth, Chancellor Gerhard Schroeder & CDU Cheffin Angela Merkel Photos - Thumilan அடுத்த வருடம் நடக்கப் போகும் ஜேர்மனிய Chancellorக்கான தேர்தல் இவ் வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 கலாசாரம் பண்பாடு சம்பிரதாயம் சாமிக்குற்றம் என்ற போர்வைக்குள்தான் எத்தனை வக்கிரங்கள் ஒழிந்து கிடக்கின்றன. தற்போது ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பத்மா அர்விந்தின் பதிவில் இறந்து போன கணவனை சொர்க்கத்துக்கு அனுப்ப ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு சீரழிவை வாசித்தேன். அதை வாசித்த போது இப்படியும் நடக்குமா என்றிருந்தது.
நிரந்தரச்சுட்டி

2005/06 அவர் ஒரு பெரிய நாட்டாண்மை போலத்தான் நடந்து கொள்வார். பேச்சும் செயலும் தன்னை விட்ட ஆட்கள் இல்லையென்பது போலத் தொனிக்கும். வார்த்தைகளில் அதிகாரம் உதிர்க்கும். பணம் அவரிடம் கொட்டிக் கிடப்பதால் திமிர் அவர் நடையில் துள்ளும். அவர் வீட்டுக்குள் ஆடுகள் வந்து பூங்கன்றுகளில் வாய் வைத்து விட்டால் போதும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 ஜெயந்தியும் பாலாவும் என்னையும் புத்தக விளையாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றி ஜெயந்தி. நன்றி பாலா. இன்று எழுத முடியும் போலத் தெரியவில்லை. நேரம் பிரச்சனையாயிருக்கிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 புத்தகங்கள், வாசிப்பு... என்னும் போது என் முன்னே முதலில் வந்து நிற்பது எனது அப்பாதான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகங்கள் இல்லாமல் எனது அப்பா பயணத்தால் வந்ததில்லை. சொக்கிளேட்ஸ்... தேங்காய்ப்பூரான்...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா. அக்கதையை நான் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்.. கதைகள் போல இருதடவைகள் வாசித்தேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 காஞ்சி பிலிம்ஸ்ஸின் பதிவிலிருந்த கற்பழித்த மாமனாருக்கே மருமகளை மனைவி ஆக்கி கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. என்பதைப் படித்தேன். நம்ப முடியவில்லை. இப்படியும் இந்த 21ம் நூற்றாண்டில் மூடத்தனமான தீர்ப்பு வழங்குவார்களா? சம்பவத்தன்று நூர் முகமது வெளியே சென்றிருந்தார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 மோப்பக் குழையும் அனிச்சம் - முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. பிள்ளைகளின் மனமோ அனிச்சம் பூவை விடவும் மென்மையானது. பெற்றோரின் முகம் கோணினாலே வாடிப் போய் விடக் கூடியது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது செலுத்தும் அதி கூடிய கட்டுப்பாடு குடும்பத்தின் பொருளாதாரநிலை, தாயின் மனநிலை, பிள்ளைகளுடனான தந்தையின் நெருக்கமின்மை...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 Photo-Thumilan உரிலே கார்த்திகை விளக்கீடு அன்று கோயில்களின் முன்னால் தென்னோலை, பனையோலை... போன்றவற்றை ஒரு கூடு போலக் குவித்து, எரித்துக் கொண்டாடும் சொக்கப்பான்(சொக்கப்பனை) என்னும் நிகழ்வு இங்கு ஜேர்மனியிலும் இன்று நடைபெறுகிறது. இதற்கு இவர்கள் வைத்திருக்கும் பெயரோ Sonnwendfest.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 செங்கை ஆழியானின் வாடைக்காற்றுப் போலவே தற்சமயம் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும், பூவரசு இதழ் ஆசிரியர் இந்துமகேஸ் அவர்கள் எழுதிய ஒரு விலைமகளைக் காதலித்தேன் என்ற கதையும் அப்போது வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்து பலராலும் பேசப் பட்டது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 மரணத்தை உடம்பில் குண்டுகளாய் கட்டிக் கொண்டு.. சிரித்த படி கை காட்டி விட்டுப் போய் வெடித்துச் சிதறுபவர்களை நினைத்தாலே... மனசு பதறும். எப்படி..? எப்படி...? என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அலறும். திடீரென்று வந்த ஒரு வேகத்தில் தற்கொலை செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 குழைக்காட்டான் வலைப்பதிவாளர்களுக்கு உடல் நலன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டயற் சம்பந்தமாக பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும் சொல்லிய விடயங்களை இளங்காற்றுக்காக எழுதினேன். இந்த வழியையும் ஒருதரம் பின்பற்றித்தான் பாருங்களேன். முழுமையாக உதவாவிட்டாலும் கொஞ்சமாவது உதவலாம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/06 2வது அகவையில் காலடி வைத்திருக்கும் ஒரு பேப்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 25வது ஒரு பேப்பர் வழமை போலவே ஏதோ ஒரு வகையில் எம்மை அவாப்பட வைக்கும் விதமாக வந்துள்ளது. இம்முறை பலாப்பழம். வாயூறுகிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர்... என்று பெண்களின் ஆக்கங்களை, பெண்களுடன் சேர்ந்து, அழகான முறையில் தொகுத்து வெளியிட்ட றஞ்சி தற்போது பெண்குரல் அவிழ்க்கும் இணைய இதழ் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். கதை கவிதை கட்டுரை ஓவியம்... என்று அழகாக மலர்ந்துள்ளது. பாருங்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 தமிழ்புத்தகங்களையும் அப்புத்தகங்களை எழுதியவர் வெளியிட்டவர்கள் போன்ற விபரங்களையும் தொகுக்கும் ஒரு அரிய முயற்சி வெங்கட் டினால் நடை முறைப் படுத்தப் பட்டுள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 சுனாமி அனர்த்தத்தை மையமாகக் கொண்ட, நர்மதா நவீந்திரனின் ஓவியத்தை முகப்புப் படமாகக் கொண்டு, 26வது ஒரு பேப்பர் இணையத்தில் வெளி வந்துள்ளது. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 ஆடி மாத திசைகள் கவிதைச் சிறப்பிதழாக...! #
நிரந்தரச்சுட்டி

2005/07 இப்படியே புத்தகங்களும், வாசிப்பும் என்னோடும், என் வாழ்க்கையோடும் மட்டுமன்றி, என் குடும்பத்தோடும் ஒன்றியிருந்தன. இப்படியிருக்கையில்தான் அமைதியாயிருந்த எங்கள் குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாகிப் போகும் காவிய நாயகர்கள்-கரும்புலிகள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தை பெண் எழுத்தாளர் ஒருவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
நிரந்தரச்சுட்டி

2005/07 2012 இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இடமாக லண்டன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 புலம் பெயர்ந்த பின் ஆனந்தவிகடன் குமுதம்... போன்றவைகளுடன் மட்டுமாய் இருந்த எனது வாசிப்பு உலகம் 1997 யூன் 9 ஐபிசி தமிழின் வரவுக்குப் பின் சற்று விரிவடையத் தொடங்கியது. ஐபிசி வானொலியில், இரவி அருணாச்சலம் அவர்கள் நடாத்திய ஒரு நிகழ்சியினூடு சக்தி பெண்கள் இதழின் அறிமுகம் கிடைத்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 எனது இந்தக் கட்டுரையை திண்ணையில் வாசித்து விட்டு கலைமணி இம்மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். கலைமணி அவர்களை அவமதிக்கும் எண்ணத்துடனோ, அல்லது அவரோடு சண்டை பிடிக்கும் எண்ணத்துடனோ இதை இங்கே நான் பதியவில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/07 அவுஸ்திரேலியாவிலிருந்து மின்னஞ்சல் மூலமாக ஒரு வேண்டுதல் வந்துள்ளது. அக்கறையுள்ளவர்கள் உங்கள் வாக்குகளையும் அளியுங்கள். NOW WE HAVE A OPPORTUNITY TO CAST OUR VOTES TO MAKE TAMIL AS OFFICIAL LANGUAGE IN THE UN. PLEASE DO NOT MISS THIS GRATE OPPORTUNITY. ASK ALL OUR KNOWN PEOPLES TO VOTE FOR IT. Go to:http://petitions.takingitglobal.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/08 எமக்கு நன்கு பரிச்சயமான இளைஞனின் (சஞ்சீவ்காந்த்) உராய்வு கவிதை நூல் வெளியீடு இம்மாதம் 27ந் திகதி லண்டனில் நடைபெற உள்ளது.
நிரந்தரச்சுட்டி

2005/08 அன்று 1976 ம் ஆண்டு ஜனவரி 12ந் திகதி. நான் A/L (கபொத உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த காலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்கிகளை வானொலியில் ஒலிக்கவிட்டு அந்த இசை பின்னணியில் ஒலிக்க நான் படித்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்தவாறே படிப்பது அதாவது Pure Maths, Applied Maths செய்வதில் எனக்கு அலாதி பிரியம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/08 ஷ்ரேயா சில தரவுகளில் தப்போ அல்லது நான் குழம்பி விட்டேனோ தெரியவில்லை. நாளை வந்து சரி பார்த்து மிகுதியை எழுதுகிறேன். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/08 தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/08 திண்ணியத்திலே மலத்தை வாயிலே திணிக்கல்லையா? இதைவிட காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்கு.. இப்படி கேவலமான விசயம் ஏராளம் நடந்துகிட்டுதான் இருக்கு வெண்மணிச்சம்பவம் நடக்கலியா? இப்படி நடக்குமான்னு கேட்கும்போது எனக்கு எரிச்சல் தான் வருது? உங்க கருக்கு நாவல் தமிழின் முதல் தலித் தன் வரலாற்று நாவலா கருதப்படுது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/08 புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி - 1 புத்தகம் பேசுது இதழுக்கு பாமா அளித்த பேட்டி - 2 பேட்டியின் இறுதிப் பகுதி கருக்கு போலவே சங்கதியிலேயும் அதே மாதியான மொழிநடை வாழ்க்கைச் சூழலைக் கொண்டு வந்திக்கீங்களே? இது வேணுமினே பண்ணதுதான் மொழிநடையில் கருக்க
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/08 7000 இந்தியப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள் பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியாவில் புதிய சட்டம் இந்தியப் பெண்கள் தமது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்திய நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/09 நான் வலைப்பதிவுகளை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. முதற் பதிவை 27.7.2003 இல் பதிந்தேன். விடுமுறையில் இருந்ததால் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் போய் விட்டது. இன்றுதான் கவனித்தேன். #
நிரந்தரச்சுட்டி

2005/09 திகதி, தேதி இவைகளில் எது சரி? இவைகள் தமிழ் சொற்கள்தானா? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/09 நான் ஜேர்மனிக்கு வந்து சில மாதங்களில் எனது அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான வழக்கு நடை பெற்றது. ஜேர்மன் மொழியைக் கேட்டாலே சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்ற உணர்வு அப்போது எனக்கு. உனது Tochter(மகள்) என யாராவது என்னோடு கதைத்தாலே, நான் அவர்கள் டொக்டரைப் பற்றி ஏதோ சொல்கிறார்கள் என நினைப்பேன்.
நிரந்தரச்சுட்டி

2005/09 நேற்று எனக்குக் கிடைத்த புத்தகம் சஞ்சீவ் காந்தின் உராய்வு கவிதை நூல். 54 கவிதைகளுடன், மூனாவின் ஓவியங்களுடன் புத்தகம் அழகாய் உள்ளது. சஞ்சீவ்காந்த், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன்.
நிரந்தரச்சுட்டி

2005/09 ஒரு பேப்பரின் 30வது வெளியீடு கிடைத்துள்ளது. 29வது கிடைக்கவில்லை. ஆதலால் இனி எனக்கு அனுப்ப மாட்டார்கள் என்றே நினைத்தேன். இணையத்தில் வாசிக்கவும் நேரம் சரியாக அமையவில்லை. மீண்டும் என்னை நினைத்து 30ஆவது பேப்பரை அனுப்பியுள்ளார். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/09 - தீட்சண்யன் - விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும் நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல திரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே! - என்றழைக்க பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது பை
நிரந்தரச்சுட்டி

2005/09 ஜேர்மனியின் Chancellor யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. நேற்றைய தேர்தல் முடிவுகள் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/09 ஏதோ ஒரு உந்துதலில், அன்றைய பொழுதின் இறுக்கத்தில் அல்லது இனிமையில் என் மனப்போக்கில் எதையாவது எழுதுவேன். அவைகளில் முடிக்காமல் போனவை பல. அப்படியான ஒரு துண்டு இது. என் மனதுக்குள் இருக்கும் இதன் தொடர்ச்சியை எழுதி முடிப்பேனா அல்லது இப்படியே விட்டு விடுவேனா என்பது எனக்கே தெரியாத விடயம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/09 படித்ததில் பிடித்தது எஸ்.விஜயா செல்வராஜ் ஒரு சொட்டு மழை வீழ்ந்தவுடன் பரவி வருகிறதே.. மணம்... அது போலத்தான் உன் நினைவும் நினைக்கும்போதே நெஞ்சில் பரவும் #
நிரந்தரச்சுட்டி

2005/09 என் இனமே...! என் சனமே...! என் இனமே...! என் சனமே...! என்னை உனக்குத் தெரிகிறதா? எனது குரல் புரிகிறதா? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/10 நூல் அறிமுகம் - தேவா(ஜேர்மனி) புகலிடபெண் எழுத்தாளரான நிரூபாவின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இச் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த பல சிறுகதைகள் புகலிட சஞ்சிகைகளான "பெண்கள் சந்திப்பு மலர் அம்மா, ஊதா சக்தி" போன்றவற்றில் வெளியானவையாகும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/10 ஒக்டோபர் மாத ஒரு பேப்பரும், வடலியும் வந்துள்ளன. நிறைய விடயங்கள் உள்ளே உள்ளன. வாசித்து விட்டு வருகிறேன். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/10 பெண்கள் சந்திப்பு மீண்டும் லண்டனில் நடைபெற்றுள்ளது. 24வது புகலிடப் பெண்கள் சந்திப்பிலும் வழமை போலவே என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆனாலும் சந்திப்பில் என்ன கலந்துரையாடப் பட்டிருக்கும்... என்ன ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டிருக்கும்...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/10 பாடல் ஒலி வடிவத்தில் பாடல் வரி வடிவத்தில் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 சின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் வாடகைக்கு இருந்தார்கள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு பாண்டி.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பரிசாக நீங்கள் விரும்பிய ஒரு பாடல் தரப்படும். நீங்கள் விரும்பிய பாடல் இல்லாவிட்டால் நான் விருமப்பிய பாடலொன்றைத் தருவேன். முதல் உலகக்கிண்ணக் காற்பந்து எந்த ஆண்டில் நடைபெற்றது? எந்த நாட்டில்...
நிரந்தரச்சுட்டி

2005/11 விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பரிசாக நீங்கள் விரும்பிய ஒரு பாடல் தரப்படும். நீங்கள் விரும்பிய பாடல் இல்லாவிட்டால் நான் விருமப்பிய பாடலொன்றைத் தருவேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே...! அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லயனலும் ஒருவன். லயனல் அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 பழைய கணக்கீட்டு முறைகள் பற்றி எனக்குத் தெரிந்த ஒன்றை கடந்தவாரம் எழுதிய போது திரு.பத்மனாபஐயர் அவர்கள் "தமிழில் கணிதம் தொடர்பான ஒரு தகவலைத் தருவதாகச்" சொன்னார். சொன்னபடி அனுப்பியும் உள்ளார்.
நிரந்தரச்சுட்டி

2005/11 #
நிரந்தரச்சுட்டி

2005/11 #
நிரந்தரச்சுட்டி

2005/11 அம்பலவாணன் நேமிநாதன் யாழ்-மாவட்டம் சுன்னாகம் மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ் வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 தோளில் என் சின்னவனைப் போட்டுக் கொண்டு ஒழுங்கைகள் தாண்டி குறுக்கு வழியால் எனது மாமி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதுதான் அவளைக் கண்டேன். அவளது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். ஆனால் அது அவள்தானா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருந்தது.
நிரந்தரச்சுட்டி

2005/11 கோ.கணேஷின் பதிவிலிருந்து முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் தின்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் தின்பதற்கான காரணத்தைக் கேட்டார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 திருமதி சிவா தியாகராஜாவின் நினைவில் அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான்.
நிரந்தரச்சுட்டி

2005/11 விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடல༯span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 1)பத்துக்கோடி என்பது எத்தனை பூச்சியங்களைக் கொண்டது? அது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 2) உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் எது? எந்த ஆண்டில் விற்கப் பட்டது? எவ்வளவு பணத்துக்கு விலை போனது? எந்த நாடு வாங்கியது? எந்த நாட்டிடமிருந்து வாங்கியது? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 வீரமரணம் - 20.06.2000 அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 வீரமரணம் - 11.04.2000 ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும்.
நிரந்தரச்சுட்டி

2005/11 நவம்பர் மாத வடலி வழமை போலவே புலவர் மணவை தங்கவேலனின் பண்பாடு என்றால் என்ன?, த.சிவபாலுவின் பிஞ்சு உள்ளத்தில் நற்சார்பான உளப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும் (உளவியல் தொடர்பான தொடரின் இரண்டாவது அங்கம்,) ஏ.ஜே.ஞானேந்திரனின் எங்கேதான் ஓடி ஒளிந்து கொள்வது? (பறவைக்காய்ச்சல் சம்பந்தமானது,) சி.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 நியாயமான தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா விரைந்து முன்வைக்க வேண்டும்- இழுத்தடித்தால் அடுத்த ஆண்டு சுதந்திரப் போராட்டம்: பிரபாகரன் பிரகடனம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக௼/span>
நிரந்தரச்சுட்டி

2005/11 மக்கள் வாழ மக்கள் வாழும் மண்ணது மீள கற்கை மறந்தவன் தாயின் தழுவல் பொற்கை மறந்தவன் சொந்த வீட்டுப் படுக்கை மறந்தவன் புதுத் தளிர்க்கை மறந்தவன் பந்த பாசம் எல்லாம் ஒன்றாய் வெந்து மாளும் வேட்கை நிறைந்தவன் மண்ணிலே தவழ்ந்து மண்ணிலே நடந்து மண்ணையே குருதியால் நனைத்து மண்ணுக்காய் உரமாகி கண்ணொத்த விடுதலைக்காய் விண்ணையே அள஼/span>
நிரந்தரச்சுட்டி

2005/11 மறப்போமா நாமும்மை மாவீர நாயகரே, கிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்; இரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்; பறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்; கரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு சுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர-நெய் ஊறலிட வரப்பால் வழிநடந்தும் உரைப்பால் உளங்கவர்ந்தும் நெருப்பாய் நிலையுண༯span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. பெண்விடுதலை என்றால் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/11 சவுதியில் பெண்கள் முதல்முதலாக வாக்களிக்கவும் போட்டிபோடவும் செய்யும் தேர்தல் ஒன்று நடந்துள்ளது. சவுதிஅரேபியாவில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்கவும் பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடவும் செய்யும் ஒரு தேர்தல் நடந்து வருகிறது.
நிரந்தரச்சுட்டி

2005/11 பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஏணி - சிறுகதையை நீலா என்பவர் எழுதியுள்ளார். கதையும் கருவும் நன்றாக அமைந்துள்ளன. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 நிலாவின் இப்பதிவைப் என்னைப் புடவையில் பார்த்ததும் ‘என்னக்கா இன்னும் பட்டிக்காடாவே இருக்கீங்க’ என்று கேலி பேசுகிறார்கள் என் கிராமத்துப் பெண்கள்! பார்த்ததும் என் மனதைச் சுரண்டும் ஒரு விடயம் ஞாபகத்தில் வந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 ஒரு பேப்பர் - 35ஐ வாசித்து விட்டு, பிடித்தவை பிடிக்காதவை பற்றி எழுத நினைத்தேன். வழமை போலவே எழுதுவோம் எழுதுவோம் என்ற நினைப்போடு நாட்கள் ஒடி விட்டன. மாவீரர்களை நினைவு கூர்ந்து, எமது விடியலுக்காய் தம்மை அணைத்துக் கொண்ட தியாக தீபங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகப்புப் படத்தோடு கடந்தவாரம் பேப்பர் வந்தது. உள்ளே மாவீரர் சிறப்புப் பக்கங்களோடு...
நிரந்தரச்சுட்டி

2005/12 தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.
நிரந்தரச்சுட்டி

2005/12 #
நிரந்தரச்சுட்டி

2005/12 #
நிரந்தரச்சுட்டி

2005/12 சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை உரிமை கூட இல்லை சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் வெளி நாட்டுப் பெண்களுக்கு மிகவும் அடிப்படையான உரிமைகளைக் கூட உறுதி செய்ய சிங்கப்பூர் அரசு தவறுவதாக அமெரிக்காவிலிருந்து இயங்கும் , மனி஼/span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார். கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு நான் என்ரை வேலையளைச் செய்து கொண்டிருந்தன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற சைலானி சிவசுப்பிரமணியம் என்பவரை எனக்குத் தெரிந்த ஒருவர் தேடுகிறார். குறிப்பிடப் படும் இப் பெண் 1962இல் பிறந்தவர். விபரம் தெரிந்தால் அறியத் தாருங்கள். நன்றி. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாராயண ரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 அந்தக் காலத்து யாழ்ப்பாணம் 2005 தைமாதம் அவுஸ்திரேலியா Mellbournஇல் வெளியிட்டு வைக்கப் பட்டது - மூனா - "புத்தக வெளியீட்டு விழாவொன்றுக்குப் போறன். நீயும் வரப்போறியோ?" அண்ணன் கேட்டார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 நேபாளத்தில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு நேபாளத்தில் பெண்களின் உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2005/12 தொலைக்காட்சித் தொடர்களிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிளிலோ அதிக ஈடுபாடு கொள்ள முடியாத நான், பாலுமகேந்திராவின் `கதைநேரம்` போனால் விட்டுவிடாமல் பார்ப்பேன். ஒரு பிரச்சனையை எடுத்து அதை கச்சிதமாகச் சொல்லி விடும் திறமை பாலுமகேந்திராவுக்குத்தான் என வியப்பேன்.
நிரந்தரச்சுட்டி

1