மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்
மலரினைத் தலையில் வைத்து
மலரே என்பார்
சொல்லினை அம்பாய் எய்து
துடிக்காதே என்பார்
வேரினில் குத்தி விட்டு
வாடாதே என்பார்
கையினில் தீயைத் தந்து
தீயாதே என்பார்
கண்ணிலே கையை விட்டு
கலங்காதே என்பார்
புண்ணினைக் கிளறி விட்டு
புளுங்காதே என்பார்
மண்ணினைத் தாங்குவாள் போல்
பொறுமை கார் என்பார்
நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்
பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் . என்ன சொல்வார்
பேதைதானே நீ
பேசாதே என்பாரா?!
சந்திரவதனா
யேர்மனி
17.8.2000
Comments
அழகான (எனக்கே புரியும்) கவிதை !! ஆமாம், சந்திரவதனா, எப்போதான் எனக்கு பதில் போட போகிறீர்கள்????, Posted by: raviaa at June 4, 2004 02:39 PM |
நட்புடன் சந்திரவதனா, ஒரு குட்டு. வலியை பொறுத்துக் கொள்ளுங்கள். நட்புடன் |
அன்புநிறை சந்திரா, |