பிறந்தநாள் வாழ்த்து - 2004 தலைவர்கள் எல்லோருமே
மக்கள் மனதில் நிலை கொள்வதில்லை
நீங்கள் நிலை கொண்டீர்கள்
அண்ணனாய், ஆசானாய்
தம்பியாய், தந்தையாய், மைந்தனாய்....
மக்களோடு மக்களாய்.. நின்று
தலைமைக்கு அர்த்தம் சொன்னீர்கள்
பாட்டுக்களும் கவிதைகளும்
பெண்ணடிமை பற்றிப் பேச
செயலால்
பெண்ணடிமை விலங்கொடித்தீர்கள்
நீங்கள் வெறுமனே தலைவனல்ல
தமிழன் தலை நிமிர்ந்து நிற்க
காலம் எமக்களித்த வரலாற்று நாயகன்
பிறப்புக்கு அர்த்தம் சொன்ன தூய தாயகன்.
தமிழனின் அடிமைத் தளையறுக்க என்றே
அவதரித்த உங்களை
உங்களது 50வது பிறந்தநாளில் வாழ்த்துவதில்
பெருமையடைகிறோம் பேருவகை கொள்கிறோம்.
சந்திரவதனா
2004