நிராகரிப்பு

1)

என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.


2)
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.


3)
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.


சந்திரவதனா
5.9.1999
 
Comments
நெல்லி said...

பாராட்டுக்கள். அழகான கவிதை! படங்களும் அப்படியே!!

Tuesday, October 10, 2006 7:44:00 PM
யாழ்_அகத்தியன் said...

அழகான கவிதை

Wednesday, January 24, 2007 11:30:00 AM தமிழ்தோட்டம் said...

பாராட்டுக்கள். அழகான கவிதை!

Thursday, July 10, 2008 11:00:00 PM
 

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு