home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 44 guests online
புத்தகங்கள்
மனஓசை - சந்திரவதனா PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by முல்லைஅமுதன்   
Friday, 20 November 2009 06:43
ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.

ஈழத்தின் கல்வி, மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு, இயல்பாகவே நடைமுறை வாழ்வியலின் ஏதுநிலை என நமது பெண் படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.

ஆமை நகர்வது போலவே பெண் படைப்பாளர்களின் வருகை 80 இற்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம் அதிக பெண் படைப்பாளர்களின் படைப்புக்களை நாம் படிக்க வாய்ப்பாகியது.

மீனாட்சி நடேசையர் ,கோகிலம் சுப்பையா, குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, யாழ்நங்கை, குந்தவை, கோகிலா மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு பின்னரான இனக்கலவரம்,போராட்ட உணர்வு அல்லது போருக்குள் வாழ்கின்ற சூழல் இவர்களையும் ஆகர்சித்ததில் வியப்பில்லை. இங்கு சந்திரவதனாவின் தாய்-தந்தையரின் அறிவூட்டல் இவருக்குள் ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கலாம். சூழலை அனுபவித்து, வாழ்க்கையை சரிவர உள்வாங்கி அதனை படைப்பில் தந்திருப்பது உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகி இவர் தருகின்ற பதிவுகள் சமூக வட்டத்தின் வரம்புகளை மீறாமல் வார்த்தைகள் சிதறாமல் எங்களுக்கு தந்த ‘மனஒசை’ இல் சிறப்பான சிறுகதைகளை வாசிக்க முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வாசித்த உணர்வு இன்றும் என்னுள் ஞாபக விதைகளை விதைத்ததை உணரமுடிகிறது. என் தந்தையுடன் அவர் மாற்றலாகி சென்ற இடங்களில் நானும் என் தங்கைகளும் சிறு சிறு அசைவுகளையும்/ அமைவுகளையும் அனுபவித்து நுகர்ந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்த கதைகள் அனேகம். ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் போதும் என்னுள் எழுகின்ற உணர்வு என் வாழ்வின் கதைகளைப் போலுள்ளதாக உணர்கையில் எல்லா யாழ்ப்பணத்துக் கிராமங்களின் கதைகளே என உணர்த்தப்படுவது புரிகிறது.
Last Updated on Tuesday, 21 October 2014 22:37
Read more...
 
மனஓசை - சந்திரவதனா PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Dr.எம். கே. முருகானந்தன்   
Friday, 07 August 2009 05:48
உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:34
Read more...
 
நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by K S Sivakumaran   
Thursday, 19 July 2012 21:25

Restrained recollection of the past

A Lankan-born expatriate writer in London recaps her unbearable sorrows experienced in the North especially during the onslaught of the Tigers (Liberation Thamil Tigers Eelam) and the IPKF (Indian Peace Keeping Force) during the second half of the 1980s in her stories in Tamil. Her name after marriage is Chandrakumari Iravindrakumaran, now shortened as Chandra Ravindran. Earlier she used to write short stories in Lanka under her maiden name Chandra Thiyagarajah. She hails from Melaip Pulolyoor, Athiyady, Paruththithurai (Point Pedro) in the widely known region Vadamaratchi in the northern peninsula. Her first collection of short stories was published in Lanka in 1988. It was called “Nilalkal” (Shadows). Until her departure to U.K. via Egypt in 1991, she had worked at the government’s Yaalpaanam (Jaffna) Secretariat. While in London she had worked for seven years until 2007 for the International Broadcasting Corporation. Presently she works for a commercial firm.

In her second collection of short stories titled “Nilavukkuth Thetiyum” (The Moon will Know), she writes 10 stories in an interesting way reenacting her own experiences confronted in the turbulent times three decades ago. Free fro sentimentality she narrates beautifully in a restrained manner the agony (the anguish, uncertainty of life for the next moment and the horrors of killing in a scenario of Jungle Law) and also the ecstasy of the simple rural family life she had enjoyed as a young woman. Though lacking in chiseled craftsmanship in her stories, her descriptive and narrative power of writing captures the right mood of life in the peninsula during three decades of cruel war. Similar situations were experienced in other parts of the country particularly in places where the Tamils and Muslims lived.

Most people including this writer did not experience first hand the gruesome and horrible plight of the people caught in the killings in the name of war. As such we merely thought that the war was between the Tigers and the Lankan Armed Forces. We didn’t realize the gravity of the destruction of human values and cultures of people at large.

Unlike other Lankan writers writing in Tamil from here where emotionalism is not under control, Chandra Ravindran writing from abroad strains her emotions in tranquility that a certain kind of objectivity is displayed in her stories.

Last Updated on Tuesday, 21 October 2014 22:23
Read more...
 
தீட்சண்யம் (பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கானாபிரபா   
Friday, 30 July 2010 04:10

நாங்கள் பேசுவதில்லை
ஏனெனில்
நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால்

“தீட்சண்யன்” என்னும் எஸ்.ரி.பிறேமராஜன்

இன்னும் மனதில் ஆறாக்காயமாக இருக்கின்றது, போன வருசம் இதே நாட்களில் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்த் தொலைந்து போனதுவும், எல்லாம் தொலந்து இன்று வெறும் சூன்ய வெளியில் வெறித்து நிற்பது போல. போராட்டத்தைப் போஸ்ட்மாட்டம் பண்ணி ஆளாளுக்கு ஆய்வுகளும், நுண்ணிய ஆராய்ச்சிகளும் செய்தவர்களும், சாத்வீகம் பேசிச் சாகடித்த புனித புருஷர்களும் (!) அவரவர் வழியே போய் விட்டார்கள். கண்ணுக்கு முன்னால் ஒவ்வொன்றாகத் தொலைகின்றது மெல்ல மெல்லக் குருதி குளித்துத் திரும்ப எடுத்துக் கொண்ட தேசமும் அதில் தொங்கியிருந்த வரலாற்றுச் சுவடுகளும், பிராந்திய வல்லுறவால் சிதைக்கப்பட்டுச் சின்னாபின்னமாய் ஒடிந்து போயிருப்பது நம் தேசம் மட்டுமல்ல நம்மவர் மனங்களும் தான். “தீட்சண்யம்” கவிதைத் தொகுதியை மெல்லப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கின்றேன்.

“எங்கோ ஓர் ஆற்றுப் படுக்கையில்
சரிந்த
ஏதோ ஒரு மரத்தினால்
திசை மாறியது
அந்த ஆறு மட்டுமல்ல
வெறும் சில
பேராறுகளும்!

Last Updated on Monday, 10 March 2014 13:05
Read more...
 
தொப்புள்கொடி - தெ. நித்தியகீர்த்தி PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by மதுமிதா   
Friday, 26 March 2010 20:32

புனைவல்ல - உண்மை

சென்னைக்கு மழை வரவேண்டுமானால் வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் மையம் கொள்ள வேண்டும். மழை... மழை... மழை... பெய்து ஓயாத மழை. எங்கும் நகர இயலாது வீட்டிலேயே சிறைப்படுத்திய மழை. ஒரு மாதம் முன்பு சித்தன் யுகமாயினிக்கென மதிப்புரை எழுதித்தருமாறு கொடுத்த புத்தகம். தொப்புள்கொடி.

வாங்கிவிட்டேனேவொழிய பலவேறு காரணங்களால் புத்தகம் வாசித்ததோடு சரி. மனதில் ஆரபி, மாதவன், நிலா, வெற்றிவேலர், மீனா, அஞ்சலி, மயூரன் என பிம்பங்களின் நடமாட்டம்.ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் தொப்புள்கொடியுடனேயே சென்றேன். ஒவ்வொருமுறையும் எழுதத்தான் தருணம் வாய்க்கவில்லை. அன்று மழை உதவியது.

தொப்புள்கொடியுடன் எழுதுகோல் நிமிர்த்தி உட்கார்ந்தேன். எப்படித் தொடங்கலாம் என்கிற யோசனையுடன் கணினியின் இணையதளத்தில் மேய்ந்தேன். சந்திரவதனா பிலாக்கில் செய்தி. நித்தியகீர்த்தி மறைந்தார்.  அதிர்ந்தேன். திறந்த எழுதுகோல் மூடிக்கொண்டது. மனம் அடைத்துக்கொண்டது. வெளியே மழை அழுது கொண்டிருந்தது.

எதற்காக சித்தன் எனக்கு இந்த புத்தகத்தைக் கொடுத்தீர்கள்? எதற்காக நான் எழுதுவதைத் தள்ளிப் போட்டேன். நித்தியகீர்த்தி நம்முடன் நகமும் சதையுமாக மதிப்புரையைக் காணும்படி இருந்திருக்கலாகாதா? இப்போது ஏன் எழுதத் துவங்கினேன்? நான் எழுதும் வேளை பார்த்து இவ்வுலகத்துடனான தொப்புள்கொடி உறவை அறுத்துக் கொண்டு மறைந்து போக வேண்டிய அவசியம் தான் என்ன?

சித்தனை அழைத்து புலம்ப ஆரம்பிக்க... ஒன்றும் புரியாமல் அவர் என்னவாயிற்று என்கிறார். நித்தியகீர்த்தி இப்போது நம்மிடையே இல்லை என்றேன். தொலைபேசியும் தன் பங்குக்கு துண்டித்துக் கொண்டது. மதிப்புரை எழுதி பிரசுரிப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் நினைவாஞ்சலி என்றார் சித்தன்.

Last Updated on Tuesday, 11 March 2014 09:51
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 7 of 11