home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 30 guests online
Literatur


தமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by பழ நெடுமாறன்   
Tuesday, 27 November 2018 22:30

 தமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்

 - பழ நெடுமாறன்

 

 
உன்னை அன்றே கண்டிருந்தால் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by மாதவி   
Saturday, 03 November 2018 08:03
பல்வேறு முகங்களுடன் உறவாகத் தினம் பழக, இன்னும் சொல்லப்போனால் உரிமையுடன் பேச, அரியவாப்பு பெற்றவர்கள் கலைஞர்கள். கலைஞனுக்கு கலைகள் வசப்படுவதுபோல், காதலும் நன்கு வசப்படும். கரையில் வந்து மோதும் கடல் அலைகள்போல் வந்து வந்து அவர்கள் காலடியில் காதல் அலைமோதும்.

காதலே கலை என்றாலும், சலனம் இல்லாத மனிதர்களே இல்லை. சலனங்களை சலசலப்பின்றி வென்றவர்களும் உண்டு. வெல்வேன் என்று சலனத்துள் வீழ்ந்தவர்களும் உண்டு.

இங்கே ஒரு பெரும் மிருதங்கக்கலைஞன். அக் கலைஞனுக்கு எதுவித பட்டமும், பதவியும், கிடையாது. பரம்பரையாக வந்த கலையோ என்றால் அதுவும் அறவே கிடையாது. தானாக ஒவ்வொரு நாளாக விரும்பி விரும்பிக் கற்ற கலை. யாரும் சிறப்பாக மிருதங்கம் வாசித்தால் 'அவன் ஒரு முத்துக்குமார்' என புகழ்வார்கள். அந்த அளவிற்கு அவன் பெயரே பெரிய விருதாய் விரிந்து கிடந்தது. இன்று 40 வருடங்களாக மிருதங்கம் அவன் வாழ்வின் லயமாகவே உள்ளது.

எத்தனை மேடைகள், எத்தனை பாடல்கள், அத்தனயிலும் முத்திரை பதித்த மிருதங்க கலைஞன் முத்துக்குமார். மிருதங்கத்திற்கு இருபக்கம்போல் அவனுக்கும் இருபக்கங்கள்.
Last Updated on Saturday, 03 November 2018 08:43
Read more...
 
அழகான ஒரு சோடிக் கண்கள் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by நௌசாத் காரியப்பர்   
Friday, 26 October 2018 20:39
அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்

- பாவலர். பஸீல் காரியப்பர்

பாவலர் பஸீல்காரியப்பர் எழுதிய „அழகான ஒரு சோடிக் கண்கள்|“ கவிதை பற்றி அறியாதார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போது அதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின் இசையமைப்பில் மெல்லிசை வித்தகர் திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின் மதுரமான குரலில் ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.

இக்கவிதையின் முழுமூலத் தலைப்பு „ஒரு சோடிக் கண்கள்“ என்பதாகும். இது 1956ம் ஆண்டு, அவரது மாணவப் பருவத்தில் முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புப் பாடம் எடுத்த ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில் சக மாணவர்களினதும் மற்றும் சில ஆசிரியர்களினதும் குறும்புத்தனமான இரசனைக்குள்ளானார்.

இதன் பிறகு 1966ல், பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போது தன்னுடன் மட்டக்களப்பு தொடக்கம் கொழும்பு வரை பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண் இறங்க எத்தனிக்கும் போது தடுமாறியதையும் அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போது கண்களிரண்டும் இல்லாதிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம் அவருக்கு இந்த „ஒரு சோடிக்கண்கள்“ கவிதை ஞாபகத்தில் வர, ரயிலில் அமர்ந்தபடியே பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்து மறுபடியும் அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்து அதற்கு „கண்ணூறு“ என்று புதுத் தலைப்பிட்டு தினகரன் பத்திரிகைக்கு விடிந்ததும் அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது.
Last Updated on Friday, 26 October 2018 21:15
Read more...
 
ஆசுவாசப்படுத்தும் வேளைகளுக்காகவே... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by நடராஜா முரளீதரன்   
Friday, 26 October 2018 19:48
அவன் வைத்தியசாலைக் கட்டிலில்
படுத்துக் கிடக்கிறான்
எத்தனை கருவிகள்
அவன் மீது பொருத்தப்பட்டிருந்தன
ஒட்டி உலர்ந்து
உலாவிக் கொண்டிருந்த
அந்த உடல்
அங்கு விம்மிப் புடைத்திருந்தது

இரண்டு நாட்கள் கழிந்து
அதே கட்டிலில் ...
சில நிமிடங்களுக்கு முன்தான்
மூச்சு நின்று போயிருந்தது
Last Updated on Friday, 26 October 2018 19:52
Read more...
 
கனடாவுக்குள் நுழையும் அகதிகள் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by நடராஜா முரளீதரன்   
Friday, 26 October 2018 19:12
கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோமா ?

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனடாவில் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தொன்பது மாதங்களுக்குள் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான புகலிடம் கோருவோர் அமெரிக்க கனடிய எல்லை வழியாகக் கனடாவுக்குள் நுழைந்துள்ளமை கனடிய ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமைவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகளுக்கான திணைக்களத்தால் (IRB) கியூபெக்கிற்குள் நுழைந்த 27,674 புகலிடக் கோரிக்கையாளர்களில் பதினைந்து சதவிகிதத்தையே இதுவரை கையாள முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான அகதிக் கோரிக்கையாளர்கள் St. Bernard-de-Lacolle என்ற இடத்தில் உள்ள எல்லை வழியாக 2017 ம் ஆண்டு பெப்ரவரிக்கும் யூனுக்கும் இடையில் வந்தவர்களாவார்கள். கனடிய உச்சநீதி மன்றத்தில் 1985ம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான ‘’சிங்’’ வழக்கு குறித்த தீர்ப்பின் கீழ் கனடிய நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகள் அனைவரும் வாய் வழி மூல விசாரணைக்குத் தகமை உடையவர்கள்.
Last Updated on Friday, 26 October 2018 19:40
Read more...
 
நான் சவாரி கொடுத்த "செவீல்ட்" இளைஞன் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by நடராஜா முரளீதரன்   
Friday, 26 October 2018 06:10
நான் சவாரி கொடுத்த "செவீல்ட்" இளைஞன் "மொன்றியலில்" கடந்த மூன்று நாட்களைச் செலவிட்டிருந்தேன். ஒருவாறாக வந்த வேலையை முடித்தாயிற்று! மோகனோடுதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வருத்தத்தின்(புற்று நோய்) மத்தியிலும் எனக்கான எத்தனையோ தேவைகளை நிறைவேற்றியிருந்தான் மோகன்! தையிட்டி சிறியிடமும் மூன்று நாட்களும் போயிருந்தேன்.

இரவு நேரங்களில் நித்திரையின்றித் தவித்தாலும் அதிகாலையில் எழும்பக் கூடியதாக இருந்தது. பின் சுடு நீரில் குளிப்புப் போட்டு உடல் ஆயாசத்தைத் தீர்த்து வந்த வேலையை முடித்து விட வேண்டுமென்ற உந்துதலில் துடித்தபடி இருந்தது மனம்! இடையிலே ஒரு நாள் இரவு "சீட்டாட்டம்" வேறு. கையிலை அடுக்காதே, "காட்ஸை இறுக்கி அடிக்காதே" என்று என் மீது எகிறி விழுந்தார்கள். வழமை போல எப்படியாவது "ஜெயித்து விடு" என்ற வெறி மனதுக்குள் மதம் பிடித்தபடி! ஆனாலும் சாவகாசமாக குரலை அமத்திப் பிடித்து, பொறுமையாக வாய் வீச்சுக் காட்டாது அடக்கமாக எப்படித்தான் இருந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் என் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்பதாலா? இருக்கலாம். மனிதன் என்பவன் அடிப்படையில் சுயநலப்பிராணிதான் என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்து கொண்டேன்.

"மொன்றியலை" விட்டுப் புறப்பட்ட போது நகரம் மஞ்சள் வெய்யிலில் மினுங்கிக் கொண்டிருந்தது. இடைவழியில் ஓய்வுக்காகக் "கிங்ஸ்ரனில்" காரை நிறுத்திப் புறப்பட்ட வேளையில் கூட்டி அள்ளிக் கூந்தலை முடிந்திருந்த "பொப் மாலி" சிகையுடைத்த வெள்ளையின இளைஞர் மட்டையைத் தூக்கி ரொறொன்ரோ வரை போவதற்கு சவாரி கிடைக்குமா? என்கிறார். மனது "எற்றிக் கொள் அவனும் உன் போன்ற ஜென்மம்தான்" என்றது. ஏற்றிக் கொண்டேன்.
Last Updated on Friday, 23 November 2018 16:06
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 70