Literatur -
கவிதைகள்
|
Written by ரா. ராஜசேகர்
|
Wednesday, 09 May 2018 05:14 |
 இருள்கிழிசல்களை ஒளிக்கத்திகள் கிழித்து நிர்மூலமாக்கும் நிலம் பிரகாசிக்கும் நிஜ சூரியன் நிலத்தில் முளைக்கும் நீளும் கிழக்கும் வானும்
வேர்களின் உரைவீச்சில் கிளைகளும் இலைகளும் அடரமைதியில் உறையும்
புயலின் மவுனத்தில் காற்றும் கதறும்
பொறுமையின் புதிர்சிரிப்பில் அவசரம் விடைபெறும்
இயங்குதலின் அச்சில் எல்லாம் இங்கே எளிதாகும்
இயல்பு திரியா இயல்பு எங்கும் விரவிக் கோலோச்சியபடியே
- ரா. ராஜசேகர் சென்னை |
Literatur -
கட்டுரைகள்
|
Written by கருணாகரன்
|
Tuesday, 08 May 2018 06:41 |
நெருக்கடியில்தான் ஒருவருடைய முக்கியமும் முதன்மையும் தெரியும். ஆபத்திலேதான் நண்பர்களை நன்றாக உணர முடியும் என்று சொல்வார்கள். வன்னியில் போர் தீவிரமடைந்திருந்த1990 களின் பிற்கூறில் தொடர்புகளை அரசாங்கம் முடிந்தளவுக்குத் தடுத்திருந்தது. போர் நடக்கும் பகுதிகள் மட்டுமல்ல, அரச கட்டுப்பாடில்லாத பகுதிகளில் என்ன நடக்கிறது என்று வெளியேதெரியாத வகையில் இறுக்கத்தைப் பேணியது. அரச கட்டுப்பாடில்லாத பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தன. அதனால், அங்கே மிக மோசமான பொருளாதாரத்தடைகளையும் தகவல் மற்றும் போக்குவரத்து ஊடாட்டத்தடைகளையும் அமூல் படுத்தியிருந்தது. ஏறக்குறைய உலகத்துடன் துண்டிக்கப்பட்ட நிலை.
அந்த நாட்களில் வெரித்தாஸ் தமிழ்ப்பணி, பி.பிஸி தமிழோசை, ஐ.பி.ஸி தமிழ் போன்ற வானொலிகளே முடிந்தளவுக்கு மூடப்பட்ட பிரதேசத்தின் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தஇறுக்கத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அங்கே என்ன நடக்கிறது? மக்களுக்கான நிர்வாகம் எவ்வாறு இயங்குகிறது போன்ற தகவல்கள் வெளியே பெரிதாகத் தெரியாது. இதை எந்தப் பரபரப்பும் இல்லாமல் முடிந்தளவுக்குப் பொது வெளியில் வெளிப்படுத்தினார் க.இரத்தினசிங்கம்.
ஆனால், இது வெடிகுண்டின்மேல் தலையை வைத்துத் தூங்குவதற்குச் சமம். ஏனென்றால், வன்னியிலிருந்து கொண்டு சொந்தப் பெயரில் செய்திகளையும் தகவல்களையும் வெளியேஊடகங்களில் வெளிப்படுத்திக் கொண்டு தென்பகுதிக்கு - அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குப் போய் வர முடியாது. படையினரின், புலனாய்வுப்பிரிவின் தீவிர கண்காணிப்பு - விசாரணைப்பொறிக்குள் சிக்கி வேண்டி வரும்.
|
Last Updated on Thursday, 26 July 2018 09:16 |
Read more...
|