home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 17 guests online
Samugam
இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..? PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Thursday, 23 July 2009 22:39
பெற்றோரே சிந்தியுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்றதான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ இதுவரை சரியான முறையில் கிடைக்கவில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப் பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.
1 - ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

2 - எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார் பெண் கேட்டு வரலாம் என்பதைத் தெரியப் படுத்துவதற்காக..

3- ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்பதற்காக...
என்று காரணங்கள் நீண்டன.


இப்படியான கருத்துக்களின் மத்தியில்,
"இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக் காக்க வேண்டும்" என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்காக...
என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க..., சிரிப்பாக இல்லை..! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க பூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார் என்றுதான் எதிர் பார்த்தேன். கருத்துக்கள் தருவது அவரவர் சுதந்திரம். ஆனால் எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான உப்புச் சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூகத்தை, எமது கலாசாரத்தை, எமது பண்பாட்டை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமானமாகிறது.

குறை பிடிக்கவும், குற்றம் பிடிக்கவும், பருவம் பார்த்துத் தருணம் தேடி பெண்ணைச் சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக் கூட்டம் காத்திருக்கும். ஊரவர்தான் அப்படியென்றால் உள்ளுக்குள் அதைவிடக் கேவலம். அனேகமான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் வீட்டுக்குள்தான் நடக்கின்றன. மாமாவால், சித்தப்பாவால், அக்காவின் கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால்... என்று பெரும்பான்மையான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் உள்ளிருப்பவர்களால்தான் அரங்கேறியுள்ளன. இன்னும் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் எம்மவரிடையே இவை குமுறல்களாகவும், கோபங்களாகவும், ஆற்றாமையாகவும் பெண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றன. இவைகளை வெளியில் சொல்லி கலாச்சாரம், பண்பாடு என்று வாயளவில் உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிடம் தைரியம் இல்லை. வெளியில் தெரிந்தால் சமூகமும், அதன் கலாச்சாரமும், அதன் பண்பாடும் பாதிக்கப் பட்ட பெண்களையே பாழுங்கிணற்றில் தள்ளி விடும் என்ற பயம்.

இந்த நிலையில் நன்கு யோசித்துப் பாருங்கள்.
ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள எமது கலாச்சாரமும் பண்பாடும் உதவுகிறதா? அல்லது விழிப்புணர்வும் தைரியமும் உதவுகிறதா?
என்று.

எமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காத்து, எமது முகங்களை அழிய விடாது காப்பது ஆண், பெண் இருபாலாரதும் கடமை. அதற்காகப் போலிகளை, கலாச்சாரம், பண்பாடு என்று பொய்யாகப் பெயர் சூட்டி பெண்களில் திணித்து அவர்களை அடக்க நினைப்பது மடமை. இந்தப் பொய்களின் வேசம் புரியாது, போலிக் கலாச்சாரங்களில் தம்மைப் புதைத்துக் கொள்வது எம் பெண்களின் அறியாமை.

முதலில் எமது பெண்பிள்ளைகளுக்கு, எந்தப் பிரச்சனையையும் பெற்றோருடன் பேசி தம்மை நெருங்கும் துட்டர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் தைரியம் வர வேண்டும். பெற்றோர்களுடன் அவர்கள் இப்படியான விடயங்களை இயல்பாகப் பேசும் துணிவு ஏற்படும் படியாகப் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

எமது முன்னோர்கள் வரையறுத்த அனேகமான கோட்பாடுகள் அர்த்தமுள்ள, அவசியமான விடயங்களுக்காகவே இருந்தன. அவைகள் ஒவ்வொன்றுக்குமான கரு ஆரோக்கியமானதாகவும், அழகியதாகவும் இருந்தது.

ஆனால் நீண்ட கால ஓட்டத்தில், காரணங்கள் திரிபு பட்டது மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்ததொரு சுயநல நோக்குடன் கட்டாயமாகத் திரிக்கப் பட்டு, இன்றைய கால கட்டத்தில் ஏன், எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி, உண்மையான, தேவையான விடயங்கள் புறக்கணிக்கப் பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான விடயங்கள் தொடர்கின்றன.

வருத்தமான விடயம் என்னவெனில் அனேகமான பெண்களுக்கு இந்தப் பொய்யான திணிப்புகளின் போலி வடிவவங்கள் புரிவதில்லை. தாம் போலிக் கலாசாரத்தில் பொசுங்கிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் எந்தவித பிரக்ஞையும் கொள்வதுமில்லை. உண்மையில், சாமத்தியச் சடங்கை கோலாகலமாக ஹோல் எடுத்து விழாவாகச் செய்யும் அனேகமான பெற்றோருக்கு சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணம் என்னவென்றே தெரியாது.

1 - வீடியோ கமராவில் எடுப்பதற்கும்,
2 - என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,
3 - இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்பதான போலி கௌரவத்துக்கும்,
4 - கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன் கழிப்பதற்கும்..,

என்றதான இன்னும் பலவற்றை காரணங்களாகக் கொண்டுதான், பூப்படைந்த பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில் பெரும்பாலான சாமத்தியச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடு என்று போலி முலாம் பூசப் படுகிறது. அவ்வளவுதான்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறுகிறார்கள் -
ருதுவாகும் பருவத்தில், ஒரு பெண் பிள்ளையின் உளத்திலும், உடலிலும் பல் வேறு மாறுதல்கள் ஏற்பட்டு அவள் ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளப் படுகிறாள். இந்த அசாதாரண நிலை அவள் மனதை மேலும் குழப்பாத வகையில், பெற்றோர்கள் "இது சாதாரண விடயந்தான்" என்பதை அவளுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ, தற்பயமோ அவளுக்கு ஏற்படாத வகையில் அவளுடன் நிறையப் பேச வேண்டும். ஆதரவுடன் நடக்க வேண்டும், என்றும்.

இந்த நேரத்திலான அவளின் உடலின் அதீத வளர்ச்சியினால் அவள் தோள்மூட்டுகளிலும், முதுகுப் பகுதியிலும் ஏற்படும் உபாதைகளின் தன்மையை உணர்ந்து அவளுக்குத் தாராளமான ஓய்வைக் கொடுக்க வேண்டும். அவளின் தோள்மூட்டுக்களும், முதுகும் வலுப்பெறக் கூடிய வகையில் சில உடற்பயிற்சிகளை அவள் செய்ய வழி சமைத்துக் கொடுக்க வேண்டும், என்றும்.

யேர்மனியப் பாடசாலை உளவியல் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் -

பூப்படையும் நிகழ்வை சாதாரண நிகழ்வாக எடுக்காமல் இப்படிப் பெருவிழாவாகக் கொண்டாடிப் பெரிது படுத்தும் போது, அது அந்தப் பெண்பிள்ளைகளின் மனதில் பல்வேறு பட்ட சலனங்களையும், உளவியற் தாக்கங்களையும் ஏற்படுத்தி அந்தப் பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழி கோலுகின்றது, என்று.

ஆனால் இங்கே புலத்தில் என்ன நடைமுறைப் படுத்தப் படுகிறது?
பல அத்தியாவசியத் தேவைகளை பெண்பிள்ளைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அத்தனையையும் விடுத்து வெறுமே சாமத்தியச் சடங்கு என்ற பெருவிழா நடாத்தப் படுகிறது. இப்படிச் செய்வதால் அந்தப் பெண்பிள்ளைகள் என்ன பயனைப் பெறுகிறார்கள்?

இதைச் சண்டையாகவோ, ஆண் பெண் பாலாருக்கிடையிலான விவாதமாகவோ எண்ணாமல் யதார்த்தமாக எல்லாப் பெற்றோர்களும் சிந்தித்துப் பாருங்கள்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறிய இந்த ஆதரவுகள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில்தான் பெண்பிள்ளைகள் மற்றவர்கள் மேல் கோபப் படுபவர்களாகவும், எரிச்சால் படுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். அல்லாதுவிடில் அழுமூஞ்சிகளாகி விடுகிறார்கள்.

இந்த உடல் ரீதியான மாறுதல்கள் ஆண்களிடமும் ஏற்படுகிறதுதான். அது சற்று வேறுபாடானதாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பு, ஆறுதல், அரவணைப்பு என்பன தேவைப் படுகின்றன. அது கிடைக்காத பட்சத்தில்தான் அவர்களும் எரிச்சல், கோபம், மௌனம் என்பவற்றிற்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு வெளியில் செல்லவும், அவர்கள் விரும்பியதைச் செய்யவும் தாராளமான சுதந்திரம் இருப்பதால் பெண்பிள்ளைகளிடம் ஏற்படுமளவுக்கு பாதிப்பு ஆண்பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.

அதனால் முக்கியமாக, கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளைக் கட்டி வைக்கும் எமது சமூக அமைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் எமது பெண்பிள்ளைகளுக்கு இந்தச் சமயத்தில் பெற்றோரினது முழு ஆதரவும் தேவை என்பதை தமிழ்ப் பெற்றோர்கள் மறந்து விடவோ அலட்சியப் படுத்தி விடவோ கூடாது.

சந்திரவதனா
28.3.2001


மின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016

Comments

 


பரணீ

நல்ல பதிவு.
சரியாகச் சொன்னீங்க.

Montag, Juli 18, 2005 12:41:54 PM


வசந்தன்(Vasanthan)

இது ஆழமான, சிக்கலான விவாதப் பொருள். என்னைப்பொறுத்தவரை தேவையில்லையென்பதுதான் என் பதில். இதுகுறித்து ஆழமாக எதுவும் சொல்லமுயலவில்லை.

பெரும்பாலும் பின்னாளில் குறிப்பிட்ட பெண்பிள்ளை அச்சடங்கு குறித்து சங்கடப்படுகிறாள் என்றே நினைக்கிறேன்.

Montag, Juli 18, 2005 3:01:43 PM


Tamil Circle

சாமத்தியச் சடங்கு ஊடான கலாச்சார விபச்சாரமும்
www.tamilcircle.net

நேபாளத்தில் நேற்றைய குமாரிகள், வாழ்வைத் தேடும் முன்னாள் தெய்வங்கள், என்ற தலைப்பில் முதல் மாதவிடாய்க்கு பின் அரண்மனைக்கு வெளியில் தூக்கி வீசப்படும் இவர்கள் பெருமளவில் விபச்சாரியாக அல்லது திருமணம் இன்றி வாழ்கின்றனர்.(21.1.1997)50 நேபாளத்தில் குழந்தையிலேயே தெய்வத்துக்கு காணிக்கையாக்கப்பட்ட பெண்கள் சிறுமியிலேயே அழகுமயப் படுத்தப் படுகின்றனர். இது இந்தியாவில் இந்து பண்பாட்டில் தேவதாசிகளை உருவாக்குவது போல் இங்கு அதற்காகவே பருவமடைய முன் பயன்படுத்தப் படுகின்றாள். இப்பெண்கள் பருவமடைந்த பின் தூக்கி வீசப்படும் அதே நேரம் பகிரங்கமான விபச்சாரியாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகின்றாள். பருவம் அடையும் வரையிலான வசதியான வாழ்க்கை. பின்னால் பகிரங்கமான விபச்சாரி. இதுவே சாதாரண சாமத்திய சடங்கிலும் பொதுப் பண்பாகும்.

சாமத்திய சடங்கின் பெயரால் ஆணாதிக்கம் பெண்களுக்குப் போடும் பொன் விலங்கு பலவிதத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இந்தச் சடங்கு பணம் வசூலிப்பதிலும், ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் கவனமாக உள்ளது. ஒரு தனிநபர் திருமணத்திலோ, சாமத்திய சடங்கிலோ, பிறந்ததின கொண்டாட்டத்திலோ.. இது போன்றவற்றிலோ பணம் வாங்குவதும், செய்வதும் சமூக நோக்கமல்ல சுயநலன் மட்டுமே அரங்கேறுகின்றது. இதில் குறிப்பாக சாமத்திய சடங்கில் வாங்கும் போதும், செய்யும் போதும் அதன் அர்த்தம் பல உண்டு.

சாமத்திய சடங்கை நியாயப்படுத்தும் போது பெண்ணின் திருமணத்தை பார்க்க முடியாது போய்விடும் அல்லது ஒரு மகிழ்வான நிகழ்வை ஏன் செய்யக் கூடாது. எமது கலாச்சார கட்டுப்பாடுகளை பிள்ளைக்கு உணர்த்துவதற்கு, சீரழிவில் இருந்து பாதுகாக்க, என பலவற்றை சாமத்திய சடங்கை நியாயப்படுத்த முன்வைக்கின்றனர்.

ஏன் இதை பெண் குழந்தைக்கு மட்டும் செய்கின்றனர்?. இதை ஏன் ஆண் குழந்தைக்கு செய்வதில்லை?. அங்கு இந்த காரணங்கள் இல்லையோ? இதில் இருந்து புரிகின்றது தமது ஆணாதிக்கத்தை தக்க வைக்க, ஆணாதிக்க தமிழ் பண்பாடு, கலாச்சாரம் தகர்கின்ற போது எழுகின்ற ஆணாதிக்க புலம்பலாகின்றது.

ஒரு பெண் குழந்தை சாமத்தியம் அடைகின்றாள் என்றால் என்ன?. அக்குழந்தை இனவிருத்திக்குரிய விந்தை உற்பத்தி செய்து, அது இறக்கும் போது வெளியேற்றும் முதல் கழிவுக்குரிய நிகழ்வுதான் சாமத்தியமாகின்றது. இதைத் தான் கொண்டாட வேண்டும் என்கின்றனர் தமிழ் கலாச்சார ஆணாதிக்கவாதிகள். இந்த கழிவு வெளியேறுவதால் என்ன தமிழ் பண்பாடு மற்றப் பெண்களிடம் இருந்து வேறுபட்டு காணப் படுகின்றது. இதனால் எப்படி பார்ப்பனிய தமிழ் பண்பாடு, கலாச்சாரம் உதித்தெழுந்து பாதுகாக்கின்றது. ஆணாதிக்கத்தை தவிர எதுவுமே அல்ல.

மாறாக பெண் புதிய அடக்கு முறைக்கு உள்ளாகின்றாள்;. பெண் விளம்பரப் படுத்தப்படுகின்றாள். ஒரு அழகு பொம்மையாக (மொடலிஸ்ற் ஆக) நிறுத்தப் படுகின்றாள். பெண்ணை விளம்பரம் செய்வதன் மூலம் பெற்றோர் தமது பணத் திமிரை காட்டுகின்றனர். மறு பக்கம் பணம் வறுகுவதும், வசூலிப்பதும், வாங்கியதை கொடுப்பதும் ஒரு வியாபாரம் தொடர்கின்றது. பணத்தை கேட்டோமா என்றபடி வாங்குவதை விமர்சிக்காது, நாசுக்காக பாதுகாக்கின்றனர்.

இது ஏன் விபச்சாரமாக, சீரழிவாக உள்ளது. ஒரு விபச்சாரி தன் உடலைக் காட்ட, தொட, உறவு கொள்ள ஆணாதிக்கத்தால் உருவாக்கப் பட்ட விபச்சாரத் தொழிலால் பணம் சேகரிக்கின்றாள். இங்கு இவ் விபச்சாரம் கூட பல ஆணாதிக்க சமூக காரணத்தால் ஏற்படுகின்றது. ஒரு பெண் குழந்தையை பெற்றோர் விபச்சாரி போல் பெண் உறவு கொள்ளவும் குழந்தை பெறமுடியும் என்ற விடயத்தை முன்நிறுத்தி பகிரங்கமாக விளம்பரம் போட்டு அதைப் பறைசாற்றி, அப்பெண்ணை பலர் முன் நிறுத்தி இலவசமாகவோ, பணத்துக்கோ முன் நிறுத்தும் போதே அது விபச்சாரத்தின் பகுதியாகி விடுகின்றது. இதன்பின் ஒரு ஆண் அப்பெண்ணை பார்க்கும் விதமே முற்றிலும் வேறுபட்டது. அதாவது அப்பெண்ணை ஆண் பார்க்கும் பார்வை, பெண்ணின் உறுப்பில் ஏற்பட்ட மாற்றம் ஊடாக மட்டுமே (சாமத்திய சடங்கு) புதிதாக அடையாளம் காண்கின்றனர்.

நியாயப்படுத்தும் வாதங்கள் கேவலமானது. ஏன் ஆண் பிள்ளைக்கு செய்து மகிழலாமே!. அவனுக்கும் ஆண்மை விழிக்கிற நாளாக பார்த்து கொண்டாடலாமே!. ஏன் பெண்ணின் சட்டைக்குள் புகுந்து பெண் உறுப்புக்குள் புகுந்து ஏதாவது புதிய கழிவு வருகிறதா? எனத் தேடி அலைந்து கொண்டாடுகின்றார்கள். அந்த குழந்தையின் சுய அபிப்பிராயத்தை எத்தனை பெற்றோர் கேட்டு இருப்பர். அந்த பிஞ்சுகள் எப்படி இதை எதிர் கொள்கின்றன?. அக்குழந்தையின் உளவியல் பாதிப்பு என்ன? அக் குழந்தை தன்னோடு பழகிய ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம், மற்றும் பெரியோரிடத்தில்; இதை எப்படி எதிர் கொள்வாள்? எப்படி சக ஆண் குழந்தை இதை பார்க்கும்? என எத்தனை பெற்றோர் சிந்திக்கின்றனர். பெற்றோர் இது பற்றி அறிவியலாக எதைத் தெரிந்து வைத்துள்ளனர்!. எதுவுமில்லை, அறியாமை, பிற்போக்கு சிந்தனையின் வெளிபாட்டால் பிறக்கும் ஆணாதிக்கம், சுயகௌரவமும், சுயநலனுக்கு வெளியில் எந்த மண்ணாங் கட்டியும் கிடையாது. இதை மூடிமறைக்க கலாச்சாரம் தேவையாகின்றது.

பெண்ணின் திருமணத்தை பார்த்தல் என்ற வாதத்தின் பின், ஆண் குழந்தையின் திருமணத்தை பேசவில்லை. பெண்ணின் திருமணம் என்றால் உங்கள் திருமணமா? பெண் சுயஅறிவுள்ள மனிதன்தானே?. இல்லாது மிருகமா?. மாட்டுக்கு நாணயம் போட்டு இழுத்துச் சென்று தேவையானவற்றுடன் உறவு கொள்ள வைப்பது போல், பெண்ணையும் செய்ய தமிழ் கலாச்சாரத்தை கூப்பிடுகிறீர்கள்!. தமிழ் கலாச்சாரம் என்றால் ஆணாதிக்கம் மட்டும்தானோ? ஒரு பெண் சுயமாக முடிவெடுக்க, சுதந்திரமாக வாழவிட தமிழ் கலாச்சாரம் அனுமதிக்காதோ! அதன் வேலிகள் உங்கள் பிற்போக்கு மூடத்தனத்துடன் கூடிய ஆணாதிக்க அறிவிலித் தனமோ!

கலாச்சாரத்தின் சீரழிவைத் தடுக்க இது இந்த பிற்போக்கு பண்பாடு தேவையாம். எப்படி? புரியவில்லை!. கலாச்சாரச் சீரழிவு என எதை சொல்லுகின்றார்கள்? ஒரு பெண் சுயமாக தன் வாழ்க்கையை முடிவெடுப்பதைத்தானே சீரழிவு என்கின்றார்கள். அதாவது தமிழ் பெண்ணின் முடியிலே பிடித்து இழுத்து வந்து செம்மறி ஆடுபோல கழுத்தை நீட்டுவதற்கும், தலையாட்டுவதுக்கும், காட்டியவன் உடன் படுக்கவும் பிள்ளை பெறவும் தான் சீரழிவற்ற கலாச்சாரம் பற்றி பிதற்றுகின்றனர். இதை பாதுகாக்க பெண்ணின் சட்டைக்குள்ளே கழிவு வருகிறதா என விழிப்போடு இருந்து தேடுவது போல் தேடி பார்த்து கொண்டாடினால் சரியாகி விடும் என்று சமூகத்திற்கு சீரழிவை தடுக்க அறிவு விளக்கம் கொடுக்கின்றனர்.

தமிழ் கலாச்சார விளக்கம் போல் ஐரோப்பியப் பெண்கள் விபச்சாரிகளா? இல்லை அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கும் பண்பாடு, கலாச்சாரம் என்று உண்டு. உயர்ந்த பண்பாட்டை, கலாச்சாரத்தை கொச்சையாக கூறி எம் பெண்களையும், குழந்தைகளையும் வதைக்கும் ஆணாதிக்கத்தை நிறுத்துவது அவசியம். எம் கலாச்சாரத்திலும், அவர்கள் கலாச்சாரத்திலும் நல்லது, கூடாது என பல உண்டு நாம் நல்லவைகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும். ஆண், பெண்ணை சமமாக மதிக்கப் பழக வேண்டும். இது எம் ஆணாதிக்க கலாச்சாரத்தில் கிடையவே கிடையாது. ஆண், பெண் குழந்தைக்கு இடையில் உள்ள வேறுபாடு இன விருத்திக்கான உறுப்பு மட்டுமே. இது பெண்ணை அடிமைப்படுத்தும் விலங்கு அல்ல. அடிமை விலங்கை ஏந்திய ஆணாதிக்கம் பெண்ணை சிறை வைக்க வைக்கும் வாதங்கள் கேவலமானது. சொந்தக் குழந்தைகளே தம் பெற்றோருக்கு எதிராக சீரழிவு மற்றும் வக்கிர கலாச்சாரத்தை மறுப்பதும், போராடுவதும் அவர்கள் உரிமையாகும். இதை இந்த ஆணாதிக்க கலாச்சார காவலர்களால் தடுத்து நிறுத்தமுடியாது.

இதை இன்றைய சினிமா பாதுகாக்கும் வடிவமாகின்றது. ஆபாச கவிஞர் வைரமுத்துவின் கவிதையும், சாமத்தியச் சடங்கும் ஆபாசமாக இருப்பதால் ஒத்தும் போகின்றது. அதைப் சீவலப்பேரி பாண்டி என்ற சினிமா பாடலில் பார்ப்போம்

ஆ:ஏய்.. மசாலா அரைக்கிற மைனா-
ஓம் மத்தளம் என்ன விலை
மாராப்பு வழுக்கிற மயிலே- ஓம்
மல்லியப்பூ என்ன விலை
நீ பெறந்த தேதியில் அடியே எனக்குப்
புத்தி மாறிப்போச்சு!
நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்குபாதித்
தூக்கம் தொலஞ்சி போச்சு!
ஆமா தூக்கம் தொலஞ்சி போச்சு!


என்ற ஆபாச கவிஞன் வைரமுத்துவின் வரிகள் சமைஞ்ச தேதி என்பதன் ஊடாக சாமத்தியப்பட்ட நாளையும் அதை ஒட்டி எழும் ஆணாதிக்க உணர்வுகளையும் தனது வக்கிர வரிகளில் வெளிப் படுத்தியுள்ளார். இங்கு சாமத்தியத்தை பறைசாற்றி தமிழ் பிற்போக்கு கலாச்சார மானம் காக்க கொண்டாடுவதன் மூலம் எத்தனை இளைஞர்களின் புத்தியையும், தூக்கத்தையும் வைரமுத்து போல் இழந்து, பெண்ணின் மாராப்பு வழுகி விழ கவிஞர் போல் கனவு கண்டு பெண்களை ஊடறுத்து கற்பழிக்கின்றனர் என்பதற்கு சாட்சிகள் தேவையில்லை.

கவிஞரின் ஆபாச எழுத்தை மாதிரிக்கு கொஞ்சம் பார்ப்போம். கிழக்குச் சீமையிலே படத்தில் வைரமுத்து

ஆ:எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி
எக்கச்சக்கம் ஆகிப்போச்சு கணக்கு
பள்ளிக்கூடம் போகையிலே பள்ளப்பட்டி ஓடையிலே
கோக்குமாக்கு ஆகிப்போச்சி எனக்கு
இத குத்துமுன்னு சொன்னா அவன் கிறுக்கு


என்கிறானே வைரமுத்து. வைப்பாட்டி கவிஞர் மூத்த தமிழ்குடியின் கலாச்சாரத்துக்கு வழி காட்டுகின்றார். ஆண்களே வைப்பாட்டிகளை உருவாக்குங்கள். பெண்களே வைப்பாட்டியாக இருங்கள் என்று வழி காட்டுகின்றார்.அடுத்த பாட்டு வரிகளைப் பார்ப்போம்

பார்வைக்கு ஏத்த இடம்
பாவையே எந்த இடம்?
எந்த இடம் சூரியன் பார்க்கலையோ
அன்பரே அந்த இடம்


இங்கு தான் சாமத்திய சடங்கையும் வைரமுத்து வழியில் புகுந்து தேடி நியாயப் படுத்துகின்றனர். வாழ்க தமிழ்ப் பண்பாட்டு கவிஞர்! அடுத்து வைரமுத்து வரிகள்

இடுப்பு அடிக்கடி துடிக்குது
றவுக்க எதுக்கடி வெடிக்குது


மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா
மார்க்கெட்டு போகாத குண்டு மாங்கா


சோளிக்குள் என்ன இருக்கு?
மாhரப்பில் என்ன?


பாவாடை காற்றில் பறந்தால் நீ
என்ன செய்வாய்?
பல பேரின் கண்கள் முறைக்கும்
வேறேன்ன செய்வாய்?
பாவாடை காற்றில் பறந்தால்
பல பேரின் கண்கள் விழுந்தால்
பாவாடை கொண்டு
முகத்தை மூடுவேன்


என்ற வரிகள் சாமத்தியச் சடங்கு மூலம் பெண் மீது வக்கிரப் பார்வை விழுந்தால், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தால் முகத்தை மூடுங்கள், கவிஞர் வைரமுத்து பொன் மொழிப்படி. இதைத்தான் மூத்த தமிழ் கலாச்சார பண்பாட்டாளர்கள் செய்ய முடிகின்றது. ஆபாசம் என்பதற்கு கவிஞரின் எழுத்துக்கள் தான் சாட்சி.

சாமத்தியச் சடங்கை ஆணாதிக்கம் எனச் சொல்லும் போது, இல்லை இல்லை அது ஆணாதிக்கம் அல்ல என்று சொல்லியபடி ஆணாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதே ஆபாசம்.

இந்த ஆணாதிக்கத்தை எப்படி, எங்கே, எதற்குள் தேடிச் செய்கின்றனர் என கொஞ்சம் விலாவாரியாக பேச வெளிக்கிடவே ஆபாசம் என கூறி மூடிவிட முயல்கின்றனர்.

ஐயா! உங்கள் ஆண், பெண் குழந்தைகள், அக்காவுக்கு அல்லது தங்கச்சிக்கு என்ன நடந்தது எனக் கேட்டால் தமிழ் கலாச்சார செம்மல்களே என்ன கூற முடியும்!. நீஙகள் வாய் மூடிக் கொண்டிரு என்று கூறுவீர்களோ? அல்லது உனக்கு தெரியத் தேவை இல்லை என்று கூறி அதட்டுவீர்களோ? பாடசாலையில், அல்லது புலம்பெயர் நாடுகளில் வாழும் மற்ற இனத்தவர் கேட்டால் என்ன சொல்வீர்கள்? விளக்குங்கள் கொஞ்சம் விலாவாரியாக.

தரக்குறைவு பற்றி ஒப்பாரி வைத்த படி ஆபாசத்திலே உழலுபவர்கள் எழுதுபவர்கள்தான். இவர்கள் வீடியோவிலும் தொலை காட்சியிலும், சினிமாவிலும் பார்க்கும் ஆபாச (தமிழ் உட்பட) காட்சிகள், வீட்டிலும் போகும் இடம் எல்லாம் கேட்கும் சினிமா பாடல்கள், பார்க்கும் வண்ணப்பட செய்திப் பத்திரிகைள் என எங்கும் ஆபாசமும், தரக்குறைவுதான் இந்த மாதிரி எழுதும் தமிழனின் ஆதாரப் பாண்பாடு. மாதிரிக்கு வாலியின் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

கதவச் சாத்து கதவச் சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமையா ஆமா
கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய
நீ கட்ட வேணும்


இது போன்ற பாட்டுகள், பாடல் வரிகள், காட்சிகள், செய்திப் படங்கள் தான் தமிழனின் பண்பாடாகிய வெற்றியில் தான் சந்தையில் இதன் மவுசகின்றது. இதன் பண்பாட்டால்தான் சாமத்தியச் சடங்கு நியாயப் படுத்தப்படுகின்றது

Montag, Juli 18, 2005 9:25:27 PM


Chandravathanaa

பரணீ, வசந்தன்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Tamilcircle
நீங்கள் றயாகரனாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரையை இங்கு தந்ததற்கு நன்றி.
உங்கள் தளத்திலும் நிறையக் கட்டுரைகள் பார்த்தேன்.
ஒரு சிலதை வாசித்தும் பார்த்தேன். மிகுதியையும் நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்ற எண்ணம். அவைகளை என் பார்வைக்குத் தந்ததற்கு மிகவும் நன்றி.

நீங்கள் முன்னர் சக்தியில் நிதர்சினி சம்பந்தமாக எழுதிய றயாகரனா...?

Montag, Juli 25, 2005 9:44:57 AM


Tamil Circle

ஆம் நான் இரயாகரன் தான். நிதர்சனி பற்றியும் நான் எழுதியுள்ளேள்; எனது இணையத்திலும் அது உள்ளது.

Montag, Juli 25, 2005 9:10:14 PM

Last Updated on Thursday, 14 April 2016 07:49
 
சர்வதேசப் பெண்கள் தினம் PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Thursday, 23 July 2009 22:37
மார்ச் – 8
இன்று சர்வதேசப் பெண்கள்தினம். ஆணாதிக்க அடிமை விலங்குகளால் பிணைக்கப் பட்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் அர்த்தம் நிறைந்த நாள். ஒடுக்கப் பட்டும் மனம் நெரிக்கப் பட்டும் இருந்த பெண்கள் தம் வலிமையை உணர்ந்து விலங்கை ஒடிக்கத் துணிந்து ஓங்கிக் குரல் கொடுத்த நாள்.

1857 ம் ஆண்டில் போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் நிலக்கரிச் சுரங்கங்களிலும், புடவை ஆலைகளிலும, வர்த்தக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பெண்கள் வேலை செய்ய வேண்டியதொரு கட்டாயம் ஏற்பட்டது.

அது வரை காலமும், மென்மையானவர்கள், வீட்டு வேலைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள்… என்ற பல்விதமான அட்டவணைகளுக்குள் அடக்கப் பட்டு, தாம் வலிமையற்றவர்கள்தான் என்ற ஒரு மாயையில் மதிமயங்கிக் கிடந்த பெண்கள் அப்போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்துக் கொண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கான வேலை நேரம், ஊதியம், சமஉரிமை போன்ற விடயங்களில் பேதம் காட்டப் பட்டது.

இதன் விளைவாக கிளர்ந்தெழுந்த அமெரிக்கத் தொழிலாளப் பெண்கள் 10 மணி நேர வேலை கேட்டும், ஆண்களுக்குச் சமமான ஊதியம் கேட்டும் 1857 மார்ச் 8ந் திகதி புடவை ஆலைப் பெண்களின் முன்நடாத்தலில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இப்போராட்டம் முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்குள் அடக்கப் பட்டுப் போனாலும் 1907 இல் மீண்டும் தோற்றம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மகாநாடு 1910 இல் டென்மார்க்கில் கோப்பன்காகன் நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சோசலிசப் பெண்கள் கலந்து கொண்டார்கள். இதன் போதுதான் யேர்மனியின் பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிளாரே செற்கினேயினால் மார்ச் 8 ந் திகதி பெண்கள் தினமாக பிரகடனப் படுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுத்து வைக்கப்பட்டது.
கிளாரே செற்கினே அவர்களின் கோரிக்கையின் பயனாக முதன் முதலாக 1911 ம் ஆண்டு மார்ச் மாதம் 8ந் திகதி, சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப் பட்டது. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப் பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஷ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்தப் பட்டது.

அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஷ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

இருந்தும் என்ன? இத்தனை வருடங்கள் போயும் என்ன? கொம்பியூட்டர் யுகம் வந்துமென்ன? ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் என்பவள் ஆணின் உடைமை என்பது மறுக்கப் பட்டு விட்டதா? இல்லையே!
பெண் என்பவள் உற்பத்தி மெசின் என்பது மறுக்கபப்பட்டு விட்டதா? இல்லையே! இப்படி இன்னும் எத்தனை இல்லைகள்.

இந்தப் பெண் என்பவள் தனக்கே தான் சொந்தமாக இருக்கிறாளா? அது கூட இல்லையே!

அவள் எதை உடுக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும், யாருடைய குழந்தையை எந்த முறையில் தனக்குள் சுமக்க வேண்டும்… இவையெல்லாமே மற்றவர்களால்தான் தீர்மானிக்கப் படுகின்றன. அது மட்டுமன்றி இவைகளெல்லாம் மற்றவர்களுடைய சர்ச்சச்சைக்குரிய விடயங்களாகவுமே கருதவும் படுகின்றன.

பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று ஆங்காங்கு கூக்குரல்கள் கேட்கிறதுதான். ஆனாலும் இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அநுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று.

இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை… இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தார்ப்பரியம் பற்றிய சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாதசட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும், உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப் படவேண்டும்.

நாம் நாமாக வாழாது
நரகத்துழன்று
ஊருக்காய் வாழ்வது
வீணல்லவா
பெண்ணே!
ஊருக்காய் வாழாதே!
உனக்காய் வாழ்.


சந்திரவதனா
8.3.1997


மின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)

Post a Comment
Last Updated on Saturday, 16 April 2016 21:35
 
புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள் PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Thursday, 23 July 2009 22:35
உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப் பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகி விட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.
Last Updated on Thursday, 14 April 2016 07:32
Read more...
 
புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Thursday, 23 July 2009 22:33
புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.

ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையுந்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.
Last Updated on Thursday, 14 April 2016 07:50
Read more...
 
நாளைய பெண்கள் சுயமாக வாழ PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Thursday, 23 July 2009 22:28
இன்றைய இளம்பெண்களே வழி கோலுங்கள்! சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.

35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

கற்காலத்திலிருந்து மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் அவன் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.
Last Updated on Friday, 29 June 2018 07:00
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 3 of 4