எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா? - வாசிக்க
உங்கள் கருத்துக்களையும் இங்கே பதிக்க விரும்பினால்
|
Solian - யாழ் களத்தில் மேற்கோள்: அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். இதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை... ஏறக்குறைய 10 வருடங்கள் ஒன்றாக ஜேர்மன் நாட்டு பெண்களைத் திருமணம் செய்த மூவரின் அனுபவங்களை கேட்டறிந்தவன் என்றவகையில் நான் அறிந்தவையாவன... ஒருவருக்கு 5 பிள்ளைகள்.. மிகவும் நல்ல குடும்பம் என்றவகையில்தான் வாழ்ந்தார்கள். தொழிற்சாலை ஒன்றில் நல்லதொரு பதவியில் இருந்தார். திடீரென அவரது வேலை பறிபோக.. மனைவி வெளியில் பிடித்து விட்டுவிட்டார். மற்றைய இருவருக்கு தற்போது 45 வயதுக்கு மேல்.. காரணம்.. 'வயதாகிவிட்டதாம்!' (புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.) Soliyan ஞாயிறு ஐப்பசி 31, 2004 2:33 am ----------------------------------------------------------- kuruvikal - யாழ் களத்தில் நம்மாக்கள் சரியான சுயநலவாதிகள்.... காதலை வைச்சே கலியாணத்தை முடிச்சிடுவாங்கள்...பிறகெங்க பிரியுறதும் சேருறதும்.... என்ன கஸ்டப்பட்டாலும் வண்டி ஓட்ட வேண்டியதுதான்.... மேற்கத்தேயன் அப்படியில்ல அவன் லவ்விலும் சுதந்திரம் கொடுக்கிறான்...சுதந்திரமா உணர்வுகளை வெளிப்படுத்த விடுறான் அழுத்தங்கள் கொடுத்து சாதிக்க நினைக்கிறது குறைவு...ஆனா என்ன பணமில்லையோ காதல் அம்போ....அந்தளவிலதான் அவயின்ர லவ்...ஆனா எங்கட ஆக்களவிட கொஞ்சம் சுதந்திரம் இருக்கு.....! ஆனா அவங்கட லவ்வ வரையறுக்கிறது வலு கஸ்டம் எங்கட வரையறுக்கிறதும் சுகம்...நீடித்தும் வாழும்...! மற்றும்படி காதலிச்சு கலியாணம் முடிச்சா பிரச்சனை எண்டுறது எங்க ஆக்களில எங்கினையன் ஈகோ கேசுகளிலதான் அதிகம்....ஆனா அவங்கள் லவ் பண்ணுவாங்கள் எல்லாம் செய்வாங்கள்..கலியாணம் எண்டா காய் வெட்டிடுவாங்கள்...அந்த லெவலிலதான் அவங்கட லவ்....அது அவங்களுக்குச் சரி பிறகு டி என் ஏ ரெஸ்ட் செய்து பிறக்கிறதுகளுக்கு அப்பா அம்மா கண்டு பிடிப்பாங்கள்..அது பொழுதுபோக்கு அவங்களுக்கு....! நமக்காகுமோ...ஆகும்...மனசு கேக்காதே....பாவம் பாத்திடுவமே....! kuruvikal சனி ஐப்பசி 30, 2004 8:33 pm ----------------------------------------------------------- Kanani - யாழ் களத்தில் எனது நண்பர்களின் (மேற்கத்தேய மற்றும் நம்நாட்டவர்) அனுபவத்தில் காதலை மறத்தல் மேற்கத்தேயருக்கு இலகுவாக இருக்கிறது. சிறிய பிரச்சனைகளுக்குக்கூட பிரிகிறார்கள்...கோபத்திலிருக்கும்போது காதலை உணர போதிய காலவகாசம் கொடுக்கிறார்களில்லை...அதற்குள் அடுத்த காதல் தயாராகிறது... நம்மவர் காதல் என்னதான் இழுபறிப்பட்டாலும் வண்டி ஓடும்... பிரியப்போகிறோம் என்று இருந்தவர்கள்கூட....இழுபறிப்பட்டு மீண்டும் 6 7 மாதங்களின் பின் சேர்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன்... Kanani சனி ஐப்பசி 30, 2004 5:00 pm |
Copyright © 2002 Chandravathanaa Selvakumaran.
For more information, please contact Chandravathanaa