எழுதியவர்: சுமதி ரூபன் - கனடா
திகதி: 26.4.2004 16:53:11
வணக்கம் சந்திரவதனா
உங்கள் பொட்டு கிளாஸ் எனும் கதையை அண்மையில் பெண்கள் என்ற இணையத்தளத்தின் மூலம் படித்தேன்..
பின்னர் பல வாசகர்களின் கருத்தையும் படித்துப் பார்த்தேன்.. நானும் சிறுகதை எழுதுபவர் என்ற முறையில்
எனது சில கருத்துக்களையும் சொல்ல விரும்புகின்றேன்..
தலித் இலக்கியம் என்று ஒன்று உள்ளது அதில் தலித் மக்கள் தமது சமூகத்தில் தாம் எதிர்கொள்ளும்
பிரச்சனைகளை எழுதுவதுண்டு.. இந்த தலித் என்பதிற்குள் நானும் நீங்களும் நிச்சயம் அடக்கம். அடுத்தது
தலித் என்பர்களைத் தனிமைப் படுத்தி நாம் உயர்ந்தவர்கள் அவர்கட்காக நாம் குரல் கொடுக்கின்றோம் என்ற
வகையில் எம்மை நாம் உயர்த்திக் கொள்ளல்.. இந்த இரண்டாவது வகையையே தாங்கள் கை ஆண்டிருக்கின்றீர்கள்..
உங்கள் பொட்டு கிளாஸ் என்னும் சிறுகதை மூலம் நீங்கள் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் உங்கள் குடும்ப
கௌரவம் என்பவற்றை நீங்கள் பிறருக்குப் பறை சாற்றி விட்டீர்களோ என்று எனக்குப் படுகின்றது..
கருக்கு பாமாவின் கருக்கு சங்கதி போன்றவற்றை தாங்கள் படித்திருக்கக் கூடும்.. அந்த உணர்வையே
நான் நாவல்களிலும் சிறுகதைகளிலும் எதிர்பார்க்கின்றேன்.. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..
நட்புடன்
சுமதி ரூபன்
------------------------------------------------------------------------------
எழுதியவர்: Kamesh - China
திகதி: 29.3.2004
Dear Chandra,
Just now read the story 'Pottu Glass'... very nice.. thank god we never faced such problem..or we
never treated anyone like that.. Ungal Thamiz , few words i cant understand.. but I like it. I ll go through
other stories.. If U dont mind..Later I discuss with U something!
Anbudan
Kamesh
------------------------------------------------------------------------------
எழுதியவர்: ரவியா வலைப் பதிவில்
திகதி: 24.12.2003
நம்ம சந்திரவதனா க்கு வரலாம் என்றிருந்தேன்.
ஏழு வலைப்பூக்கள் எப்படித்தான் பராமரிக்கிறார்களோ ?
(உங்கள் பேரக் குழந்தை நல்ல வடிவு (சந்திரா.)
அது மட்டும்மிலாமல் இந்த இடத்தில் கதை கதையாய் கதைக்கிறார்.
கணேஸ் மாமா வுடன் பருத்தித்துறை தோசைக்கு
சாப்பிடாமலே நான் அடிமை. அவ்வளவு ருசியா சந்திரவதனா ?
சாப்பிட்டவுடன் சூடாக ஒரு 'றீ' குடித்தால் எப்படியிருக்கும்?
மதியுடன் சூள் கொட்டுன்ன மாதிரி இவர்க்கதைகளில் சப்பு (slurp slurp )கொட்டலாம்.
அவரின் பொட்டு கிளாஸ் கதையை படித்திருக்கிறீர்களா ? என்னை மிகவும் பாதித்த கதை. இலங்கையிலும்
சாதி வேற்றுமையிருக்கும் என்று எனக்கு தேரியாது. அருமையான் கதை ! சினிமா இயக்குனர்கள் இரண்டு விரல்களை
lens போல் பாவித்து angle பார்ப்பார்களே அதுப்போல் திரைப்பட (குறும் படம்) மாகவே ( கிரேன் ஷாட் உள்பட) படித்தேன்.
இல்லை பார்த்தேன்.
விமர்சன பகுதியிலும் எழுதியுள்ளேன். கதையை படித்து (பார்த்து) விட்டு படியுங்கள்.
ரவியா
nantri - வலைப்பூ
------------------------------------------------------------------------------
எழுதியவர்: ரவியா
திகதி: 28.11.2003
அன்புள்ள சந்திரா அவர்களுக்கு
உஙகள் பொட்டு கிளாஸ் கதை படித்தேன். முடிவு பிரமாதம். முடித்தவுடன் மனது பிழிந்தது.
பல நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் நாட்டில் போல் அப் பெண்ணின் அம்மா கிளாஸில் டீ (றீ)
கொடுக்க அவளை அனுமதித்ததும் ஆனால் அக்கிளாஸை தனியாக கழுவி வைத்ததும் அவள் (அம்மா)
உள் போராட்டத்தை வெளிப்படுத்திகிறது. பெரியோர்களின் பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டு பிடித்தோ
பிடிக்காமலோ கடைப்பிடித்து வந்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் தோன்றுகிறது. அவள் தலைமுறையில்
அவ்வளவுதான் சாத்தியம். அவள் மகள் அவள் தலைமுறையில் அக்கிளாஸை தனியாக கழுவி வைக்கமாட்டாள்
என்ற நம்பிக்கை அவளுக்கு........
ஓரு வேளை அவள் தன் மகள் வயதில் அவளை மாதிரியே யோசித்து பெரியோர்களை எதிர்க்க அஞ்சி அச்
செயலை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதோ?????????
ரவியா
------------------------------------------------------------------------------
எழுதியவர்: ம.வதனி
திகதி: 23.03.2003
பொட்டுக் கிளாஸ் சிறுகதையை மணிதாசன் மிக நுணுக்கமாக ஆராய்ந்துபார்த்து தனது விமர்சனத்தை
எழுதியிருந்தார். அவருடைய விமர்சனத்தோடு உடன்படுகின்றவேளையில்
மேலும் எனது கருத்துக்கள் சில: சந்திரவதனாவின் பல சிறுகதைகள் நான் சார்ந்து நின்று கூறப்படுவன.
கதையின் உண்மைத்தன்மையை கூர்மைப்படுத்துவதற்காக நான் பாவிக்கப்பட்டு வந்தாலும் கற்பனையில்
இது கையாளப்படுவதும் உண்டு. ஆனால், பொட்டுக்கிளாஸ் சிறுகதையில் நான் சார்ந்து கதை எழுதப்பட்டமையும்
ஆசிரியை தன்னையும் ஒரு பஞ்சமர் சாராத சமூகத்தில் இருந்து வந்தவள் என்று தெரிவித்தமையும் கதைகூறும்
பாடம் ஒரு பிரசங்கமே தவிர வேறல்ல என்ற தப்பபிராயத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. எனவே இதுபோன்ற
முற்போக்கான சிறுகதைகளுக்கு நான் சார்ந்து எழுதும்போது சந்திரவதனா போன்ற சமூகப் பிரக்ஞையுள்ள
படைப்பாளிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
ம. வதனி.
nantri - www.yarl.com
------------------------------------------------------------------------------
எழுதியவர்: கரவை பரணீ
திகதி: 06.03.2003
வணக்கம் சிறுகதைகள் வாசிப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை.
அவை விளங்குவதும் குறைவு என்பதாலோ தெரியாது. ஆனால் இன்று
இந்த பொட்டு கிளாஸ் பக்கம் சும்மா மேய்ந்துபார்த்தேன். ஆகா அருமை. ஒருகணம்
என்னை என் ஊரிற்கு அனுப்பி எடுத்துள்ளீர்கள். பழைய நினைவுகளை காட்சிகளாக
கண்முன்னே காட்டிவைத்துள்ளீர்கள்.ஆயிரமாயிரம் எண்ணங்களையும் நான் செய்த
பார்த்த காட்சிகளையும் காட்டிவைத்துள்ளீர்கள். நன்றி சகோதரி.
ஊரில் இருக்கும்போதுநானும் சிலவேளைகளில் சாதிக்கதை கதைத்ததுண்டு.
வேண்டுமென்று இல்லை. பகிடியாக கதைப்பேன்.
ஆனால் உள்ளுக்குள் ஒன்றுமே வைத்திருக்கமாட்டேன். நன்றி மேலும் மேலும் இப்படி கதைகளை எழுதி
எமது சமுதாயத்தின் கறைகளை கழுவிவையுங்கள் நன்றி
nantri - www.yarl.com
------------------------------------------------------------------------------
எழுதியவர்:மணிதாசன்
திகதி: 04.03.2003
டொமினிக் ஜீவா அவர்களின் நூலைப் படித்து ஏற்றபட்ட தாக்கம் இளமை நினைவுகளை மீட்பதாக கதை
சொல்லப்பட்டிருப்பது. நல்ல உத்தி! வேண்டுமென்றே அரையடி தாழ்திக் கட்டப்பட்ட ஒட்டும் பஞ்சமர்களை
ஏக வசனத்தில் அழைக்க வேண்டுமென வழக்கப் படுத்தியதும் யாழ்ப்பாணியத்தை தோலுரித்து காட்டுகிறது.
பஞ்சமரை விழிக்கும் போது வெட்டினான் கதைத்தான் நின்றான் போன்ற சொற்பதங்கள் ஆசிரியரால் கையாளப்படுவது
அவரும் அவர்களிடம் இருந்து சற்று எட்டி நிற்கும் தோற்றத்தை உணர்த்துகிறது? பாரம்பரியமான வழக்கத்தால் வந்த
பழக்கமென கொள்ளவும் இடமுண்டு. பொட்டுகிளாஸில் தேனீர் ஊற்ற மௌனமாக அனுமதித்த அம்மாவிடமும் சாதிய
பற்று மறைந்து இருந்ததா? நாளைய யாழ்ப்பாணீயத்திற்காக பொட்டுகிளாஸ் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறதா?
ஆசிரியர் இவற்றிற்கான பதிலை தந்திருக்கலாமே ?
ஒரு சிறுகதைக்குரிய கட்டுமானத்துடன் நேர்த்தியாக கிளாசில் பொட்டு வரைந்திருக்கிறார் சந்திரவதனா. பாராட்டுகள்
nantri - www.yarl.com
------------------------------------------------------------------------------
எழுதியவர்: பொன்னையா கருணாகரமூர்த்தி
திகதி: 04.03.2003
Dear Chandravathana,
Pottu Glass is a Good Story, but the way you say is not attracting.
The first Part of the Story is not Connected with the Creation. So keep it away.
Try to create lively Charactors and move THE story by them.
Which will work. Congrats!
Nadpaarntha
Karunaharamoorthy.P
------------------------------------------------------------------------------
Home
Copyright © 2002 Chandravathanaa Selvakumaran.
For more information, please contact Chandravathanaa