பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த,
பெற்றோரின் மனமாற்றம் அவசியம்!
- த.சிவபாலு எம்.ஏ. -
எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்தாழம் மிக்கப்பாடல் வரிகள். இக்கருத்தை மெய்பிப்பது போன்று பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாடு, கட்டுப்பாடின்மை ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது உளவியலாளர்களின் ஆய்ந்தறிந்த துணிபு.
பெற்றோர்கள் எவ்வளவு தூரத்திற்குக் கண்டிப்பும், கடினமும், தண்டனை விதிப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களின் பிள்ளைகள் பின்னர் மிகவும் வலுச்சண்டையாளர்களாக, ஊறு விளைவிப்பவர்களாக, இன்னா செய்பவர்களாக வளர்கின்றார்கள் என்பது உளவியலாளர்களின் கணிப்பீடு. இதனை நாம் எமது அனுவபவாயிலாகக் காணலாம். கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள் ஒன்றில் மிகவும் பயந்த சுபாவமுடையவர்களாக அல்லது ஆக்கிரமிப்புத்தன்மை மிக்க வலுச்சண்டைக்காரராக வளர்வார்கள்.
மிகுதிபாதுகாப்புணர்வை உங்கள் வீடு உங்கள் குழந்தைக்குத் தருகிறதா...?
- நளாயினி தாமரைச்செல்வன் -
சுவிற்சலாந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல தமிழ் குழந்தைகள் உளவியல் பாதிப்புக்குள்ளாகி வருவது பாடசாலைகளில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் விசேட உளவியல் வைத்தியரிடம் அனுப்பப்பட்டு வருவதோடு பாடசாலையிலிருந்து மாற்றப்பட்டு பிரத்தியேக பாடசாலைகளிற்கு அனுப்பப்படுவதையும் காணக் கூடியதாக உள்ளது. இதற்கான காரணங்களை ஆராய அதற்குரிய குழந்தைகளிற்கான வைத்தியப்பிரிவு குடும்ப அங்கத்தவர் அனைவரையும் அணுகி அவர்களது பிரச்சனைகளை ஆராய்கிறது. அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு மொழிபெயர்ப்பிற்காக போன எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. மிகுதி -
மிகுதி
முரண்களுக்குள் தொலையும் முழுமை
- அர்த்தநாரி -
குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.
- மிகுதி
கருப்பை உறவு
- அர்த்தநாரி -
மனிதனின் வாழ்க்கைக் காலம் குழந்தைப்பருவம், இளைமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என்ற நான்கு பிரதான பருவங்களைக் கொண்டது. இந்த வாழ்க்கைக் காலத்தின் முதல் 18 வருடங்கள் குழந்தைப்பருவம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிமனித நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான ஆணிவேருக்கான இந்தக் குழந்தைப் பருவத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இதனடிப்படையில்தான் குழந்தை வளர்ப்பு, குழந்தை உளவியல் தொடர்பான ஆய்வுகள் இன்று தீவிர கவனம் பெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வில் இறங்கும்போது குழந்தைப் பருவத்திற்கு முந்திய 10 மாதங்கள் தாயின் கருப்பையில் வளரும் ஒரு உயிரின் வாழ்நிலை தொடர்பான கேள்விகளுக்கு ஆய்வுகளும் மனித சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பியாக வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது.
- மிகுதி
குழந்தைப் பருவத்தைப் பாதிப்பது யுத்தம் மட்டுமா - 2
- அர்த்தநாரி -
சரியான முறையில் கணக்கிட்டால் 8 வாரங்களில் வட்டியுடன் சேர்த்து முதலையும் கட்டலாம் என்ற நிலை இருப்பினும், வட்டிக்கு மட்டும் இந்தக்கூலி கழிக்கப்படும் நிலையில் பரம்பரை பரம்பரையாகவே அடிமைத்தொழில் தொடருவதற்கு மக்களின் வறுமை, அறியாமை, பண்பாடு போன்றவையே காரணமாக அமைகின்றன. குழந்தை உழைப்பைச் சுரண்டும் இன்னோர் முக்கிய தொழில் வீட்டுப்பணி, உழைப்பு மட்டுமன்றி பாலியல்ரீதியாகவும் சுரண்டப்படும் ஆபத்து இவர்களுக்கு அதிகம். சுரண்டலானது சிலசமயம் தேசிய எல்லைகளையும் தாண்டி உள்நுழைந்துவிடுகின்றது. தனது குழந்தைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக ஏழைநாட்டுக் குழந்தைகளைப் பலியாக்கும் பணியிலும் அமெரிக்காவே முன்நிற்கின்றது
- மிகுதி
குழந்தைப் பருவத்தைப் பாதிப்பது யுத்தம் மட்டுமா - 1
- அர்த்தநாரி -
யு த்தம் இந்த உலகிற்குப் புதியதல்ல. தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட இனக்குழுப்போர்கள், மதப்போர்கள், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்கள் என்று போரும் வாழ்வுமாகவே மனித சமூகம் இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்திருக்கின்றது. ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கவும், கம்யூனிசத்தை ஒடுக்கவும், அதிகார சமனிலையைத் தக்கவைக்கவும் என கடந்த நூற்றாண்டின் அரைப்பாதியில் இரு உலகப் போர்களை இந்த உலகம் சந்தித்தபோது, இடம்பெற்ற எண்ணற்ற மனித அழிவுகளில் (முக்கியமாக யூத இன அழிப்பு, ஹிரோசீமா குண்டுவீச்சு) குழந்தைகள் பற்றி எவருமே கருத்தில் கொள்ளவில்லை. -
மிகுதி